கல்கி 2898 AD திரை விமர்சனம்!

கல்கி 2898 AD திரை விமர்சனம்!

 

 

இயக்கம் – நாக் அஸ்வின்

நடிகர்கள் – பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே

இசை – சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு – வைஜெயந்தி ஃபிலிம்ஸ்

 

பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு காம்ப்ளக்ஸ் என்ற புதிய உலகத்தை உருவாக்கி, பல சக்திகளோடு இறப்பின்றி 200 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுப்ரீம் யாஷினிடம் இருந்து மக்களை விடுவித்து உலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு போராட்டக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது. அதே சமயம், கடவுள் என்ற  வார்த்தையை அழித்த சுப்ரீம் யாஷினை அழிக்க தெய்வ குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில், போராட்டக்குழுவின் மூத்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தை பிறந்ததா?, சுப்ரீம் யாஷின் யார்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படம் மகாபாரதம் யுத்தத்தின் முடிவில் தொடங்கும் கதை, பல நூறு ஆண்டுகள் கடந்து நவீன உலகில் பல போர்களையும், அழிவுகளையும் தாண்டி கி.பி 2898 ஆம் ஆண்டு அதிநவீன காலக்கட்டத்தில் பயணிக்கிறது. .

இதில் பிரபாஸ் தான் மொத்த படத்தையும் தன் வசம் கொண்டுள்ளார் , எனினும் அவர் ஒரு சாதாரண கதாபாத்திரமாகவே வலம் வருகிறார். பிரபாஸ் தேர்வு செய்யும் படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் தான் அமையும் அதே போல இந்தப் படமும் ஒரு ஆச்சர்யம் தான் மேலும் இதில் சுப்ரீம் யாஷின் என்ற வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். 200 ஆண்டுகளாக வாழும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இரண்டாம் பாகத்தில் அவருக்கு பெரிய பங்கீடு உள்ளது .

இதில் தெய்வ குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோருடன் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,  துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையமைத்துள்ளார் அவரது பின்னணி இசை ஒரு பிரம்மாண்ட உணர்வை நம்மிடம் கொடுக்கிறது , பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மேலும் ஒளிப்பதிவாளர் DJORDJE STOJILJKOVIC பணியை விட விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் தான் படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது, இரண்டும் சேர்ந்து எது உண்மை எது கிராபிக்ஸ் என நினைக்கும் அளவிற்கு உள்ளது,

இந்தியாவில் இது போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படம் வருவது அரிது, அதிலும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மிகப்பெரிய அறிவியல் கற்பனை கதையை உருவாக்கி, அதை இந்திய புராணக்கதையோடு சேர்த்து சொல்லியிருக்கும் இயக்குநர் நாக் அஸ்வின் மிகப்பெரிய உழைப்பை இந்தப்படத்திற்கு கொடுத்துள்ளார்,

படத்தின் முதல் பாதி கதையை மெல்லமாக நம்மிடம் கொண்டு செல்ல இரண்டாம் பாதி போகும் நேரமே தெரியவில்லை , கடவுளுடன் அறிவியலை இணைத்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

மொத்தத்தில் இந்த ‘ கல்கி 2898ad ‘ திரையில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம்.

நம்ம tamilprimenews.com rating…3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *