நானும் இளைஞனாக மாறப்போகிறேன்! ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் பூஜையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!

நானும் இளைஞனாக மாறப்போகிறேன்! ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் பூஜையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!

Imak Films மற்றும் sky Frame entertainment ஆகிய நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஷெரீஃப் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது , இந்த பூஜையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகை ரசித்தா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு படத்தின் பூஜையை துவங்கினர்

இந்த நிகழ்வில்,

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது,
இந்தப்படம் எனக்கு ஆதில் மூலம் தான் அறிமுகம்,அவர் எனது நீண்ட கால நண்பர், இயக்குனர் ஷெரீஃப் ஒரு இளம் இயக்குனர் முதல் இயக்குனர் நன்றாக கதை சொன்னார் , நானும் இந்தப்படத்தின் மூலம் இளைஞனாக மாறப்போகிறேன். படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் , இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது, அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் , அனைவரும் ஒரு குடும்பம் போல இணைந்து இந்தப் படத்தை உருவாக்குவோம் நன்றி ,

நடிகர் ரசிதா மகாலக்ஷ்மி பேசியதாவது,
இந்தப்படம் எனக்கு ஆச்சர்யமான வாய்ப்பு , திடீரென ஒரு கதையை கேட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன், இது ஒரு ஹாரர் திரைப்படம் , சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகவுள்ளது, தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துகள் நன்றி,

Sharif | Alhamdulillah Finally UR NEXT Starts 😍 I Mak Films Pvt Ltd & Sky  Frame Entertainment Producer - Mohideen Abdul Kader & Mani Dop -… |  Instagram
இயக்குனர் ஷெரீஃப் பேசியதாவது,
இந்தப்படம் மூலம் நான் இயக்குனராக அறிமுகமாகவுள்ளேன், தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது நன்றி என் கதைக்கு நடிக்க சம்மதித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி , இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என நம்புகிறேன் , உங்கள் ஆதரவு கண்டிப்பாக எனக்கு வேண்டும் நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *