தி அக்காலி திரை விமர்சனம்!

தி அக்காலி திரை விமர்சனம்!

 

இயக்கம் – முகமது அசிப் ஹமீத்

நடிகர்கள் – நாசர் , ஜெய் குமார், ஸ்வயம் சித்தா

இசை – முகமது அசிப் ஹமீத்

தயாரிப்பு –  யுகேஸ்வரன்

 

ஒரு காவல்துறை அதிகாரி தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது,

சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது. உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் அந்த அதிகாரி அதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா ? அவர்களை தடுத்து நிறுத்தினாரா என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.

 

இந்தப் படத்தில் நேர்மையான மற்றும் தைரியமான காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார் நடித்திருக்கிறார் , நாசர் இந்தப் படத்தில் கிறிஸ்துவ மத போதகராக நடித்துள்ளார் , காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, வித்தியாசமான தோற்றம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் புதிதாக தெரிகிறார்கள்.

 

இந்தப் படத்திற்கு பலமாக இருப்பது நடிகர்கள் தேர்வு அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்துள்ளனர், முக்கியமாக இந்தப் படத்தில் பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

இந்த படத்தில் கிராபிக் காட்சிகள் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும்பாலான காட்சிகளை பிரமாண்டமாக நகர்த்த பெரிதும் பயன்பட்டிருக்கிறது, அதிகமான சிஜி பயன்படுத்தாமல் தேவையான அளவு பயன்படுத்தி இருப்பதால் உண்மையான உணர்வை கொடுக்கிறது, முக்கியமாக ஒளிப்பதிவாளர் கிரி முர்பி, இதுவரை தமிழ்ப் படங்களில் இடம்பெறாத லொக்கேஷன்களை தேடி பிடித்து காட்சிப்படுத்தியிருப்பதும், பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

இந்தப் படத்திற்கு இயக்குனர் முகமது தான் இசையமைத்துள்ளார், அது இந்தப் படத்திற்கு மற்றுமொரு உதவியாக இருந்தது, ஏனெனில் எங்கு இசை தேவை படும் எங்கு தேவைப்படாது என நன்கு தெரிந்து கொண்டு இந்தப் படத்திற்கான பின்னணி இசையை கையாண்டுள்ளார் ,

 

சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு விறுவிறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அதை வித்தியாசமான முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார், திரைக்கதை மெதுவாக ஆரம்பித்தாலும் இறுதியில் நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர்,

 

மொத்தத்தில் இந்த “அக்காலி” சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு விருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *