கீதம் வெஜ் ரெஸ்டாரண்ட் தங்களது புதிய கிளையை சென்னை LIC அருகே துவங்கியுள்ளது!
சென்னையில் புகழ் பெற்ற உணவகமான கீதம் ரெஸ்டாரன்ட் தங்களது 11 வது புதிய கிளையை சென்னையில் மவுண்ட் ரோடில் உள்ள LIC கட்டிடத்திற்கு அருகில் துவங்கியுள்ளது, இதனை நடிகை நளினி துவங்கி வைத்தார்,
இந்த கீதம் ரெஸ்டாரன்ட் வெஜிடேரியன் பிரியர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது, மவுண்ட் ரோட்டில் மிகப்பிரம்மாண்டமாக தங்களது கிளையை துவங்கியுள்ளது ,
இந்த நிகழ்வில்,
நடிகை நளினி பேசியதாவது,
அனைவருக்கும் வணக்கம் , சென்னையில் மிகப்பெரிய அடையாளம் LIC பில்டிங், அதற்கு அருகில் கீதம் வெஜ் ரெஸ்டாரன்ட் தங்களது கிளையை துவங்கியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அசைவ உணவுகள் உண்பதற்கு பல உணவகங்கள் இருக்கின்றது ஆனால் சைவ உணவகங்களை தேடிப் பார்த்து தான் சாப்பிட வேண்டியுள்ளது , இந்த நிலையில் மவுண்ட் ரோட்டில் கீதம் ரெஸ்டாரன்ட் மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது , இன்னும் பல இடங்களில் இந்த கீதம் ரெஸ்டாரன்ட் துவங்கி இந்திய அளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று வாழ்த்துகிறேன், நான் நிறைய சாப்பிட்டிருக்கிரென் இந்த இடத்தில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும் , அனைவரும் குடும்பத்துடன் இங்கு வந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம், இந்த உணவகம் 24 மணி நேரமும் உங்களுக்கு உணவளிக்க காத்துக் கொண்டிருக்கிறது, அனைவரும் வந்து இங்கு ருசி பார்க்கவும் நன்றி.
நிறுவனர் முரளி பேசியதாவது,
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நாங்கள் சென்னையில் பல இடங்களில் எங்களது கிளையை துவங்கியுள்ளோம் , ஆனால் இந்த மவுண்ட் ரோட்டில் நாங்கள் துவங்கியுள்ள இந்த கிளை சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இங்கு வந்து உணவருந்தும் அனைவருக்கும் இலவச கார் பார்க்கிங் உள்ளது , நாங்கள் எங்கள் உணவகத்தை 24 மணி நேரமும் அனைத்து உணவும் கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்துள்ளோம், எங்களது கிளையை இன்னும் பல இடங்களில் துவங்க உள்ளோம் அதற்கு உங்களது ஆதரவை கேட்டுக் கொள்கிறேன் ,
அனைவரும் குடும்பத்துடன் வந்து இங்கு உணவருந்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி