என்னை தடுக்க நினைப்பவர் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை! தமிழுக்கு உயிர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் அமீர்!

என்னை தடுக்க நினைப்பவர் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை! தமிழுக்கு உயிர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் அமீர்!

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,
“இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என என முழுதாக நம்பி அவரை முழுதாக மாற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆதம்பாவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குநராக மாறிவிடுவார்” என்று கூறினார்.

இயக்குனர் அமீர் பேசியதாவது,

“என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுப்பவர்கள் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது பேசட்டும்.. அதற்கு நான் அப்போது பதில் சொல்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *