குரங்கு பெடல் திரை விமர்சனம்

குரங்கு பெடல் திரை விமர்சனம்

 

இயக்குனர் – கமலக்கண்ணன்
நடிகர்கள் – காளி வெங்கட் , ராக்ஹவன் , தக்ஷனா
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்

 

open பண்ணா!

கிராமத்தில் ஒருவர் திருமணம் ஆகி ஒரு சிறுவனுக்கு தந்தை ஆன பிறகும் சைக்கிள் ஓட்ட தெரியாமல் வாழ்ந்து வருகிறார் , இன்னிலையில் அவரது சிறு வயது மகனுக்கு சைக்கிள் ஓட்ட வேண்டுமென ஆசை வருகிறது, அதனால் அவன் அந்த ஊரில் பல சங்கடங்களை சந்தித்து வருகிறான் , இறுதியில் அவன் சைக்க்கிள் ஓட்ட கற்றுக் கொண்டானா இல்லையா என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார், 1980 களில் கோடை விடுமுறை எப்படி இருக்கும் என்பதை அப்படியே நம் கண் முன் நிறுத்தியுள்ளனர் படக்குழு, இந்தப் படத்தை பார்க்கும் 80s மற்றும் 90s கிட்சுகளுக்கு பல நினைவுகள் இந்தப்படத்தை பார்க்கும்போது ஏற்படும்.

நடிகர் காளி வெங்கட் தற்போது மிகப்பெரிய கேரக்டர் ஆர்டிஸ்டாக வலம் வருகிறார், எந்த வேடத்தில் நடித்தாலும், அதன் எதார்த்தை திரையில் மிக அழகாக கொண்டுவரக் கூடியவர். அப்படி தான் இந்த படத்திலும் கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக எதார்த்தமாக நடித்திருக்கிறார். சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை ஒரு ஓரத்தில் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது நிலையை சுட்டிக்காட்டி மகன் பேசும் காட்சியிலும் மனுஷன் மவுனமாக இருந்தே கைதட்டல் பெறுகிறார். அவரின் நடிப்பு நாளுக்கு நாள் மெறுகேரிக்கொண்டே போகிறது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமே சிறுவர்கள் தான், இந்தப் படத்தில் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் கிராமத்து மண் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு போடப்பட்டிருக்கும் மேக்கப் அப்படியே கிராமத்து சிறுவர்கள் போல அவர்களை பிரதி பலித்தது,

Learning to ride cycle gives confidence, so I made 'Kurangu Pedal':  Kamalakannan

படத்தில் சிறுவனின் அக்காவாக நடித்த தக்‌ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, தோல் பாவை கலைஞராக நடித்த குபேரன் என அனைவரும் கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், மிலிட்டரி என்று கெத்தாக இருந்த பிரசன்னாவை பற்றிய உண்மை தெரிந்ததும், அவரை வெத்தாக்கும் ஜென்சனின் பேச்சுக்கள் அத்தனையும் சிரிப்பு சரவெடி.

ஜிப்ரானின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் கிராமத்து வாழ்க்கையையும், சிறுவர்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. எளிமையான பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் சிறப்பான பணி படத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்தின் வெப்பத்தையும், கிராமத்து நீர் நிலைகளின் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நம்மை அந்த காலக்கட்டத்திற்கே கொண்டு சேர்த்துள்ளார்.

'Kurangu Pedal' captures a generation's emotional connect with bicycle  'Kurangu Pedal' captures innocence of childhood and emotions between a  father-son duo: Kamalakannan, Director

இந்தப் படம் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைத்திருப்பதோடு, ரசிகர்களின் பழைய சைக்கிள் நினைவுகளை தட்டி எழுப்பியுள்ளனர்.

இப்போதுள்ள சிறுவர்கள் எதையெல்லாம் இழந்து விட்டனர் என்பதை இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் சைக்கிள் மற்றொரு பக்கம் தந்தை மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பு என படத்தை உணர்வுப்பூர்வமாக கையாண்டுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்தக் குரங்கு பெடல் 80 மற்றும் 90 களில் பிறந்தவர்களுக்கு ஒரு அழகான நினைவூட்டல்..

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *