ரத்னம் திரை விமர்சனம்
ரத்னம்
இயக்குனர் – ஹரி
நடிகர்கள் – விஷால் , பிரியா பவானி ஷங்கர் , சமுத்திரக்கனி , யோகிபாபு
இசை – தேவி ஸ்ரி ப்ரசாத்
தயாரிப்பு – கார்த்திக்கேயன் சந்தானம்
ரவுடி ஒருவனை ஒரு கும்பல் கொலை செய்ய முயர்சி செய்கிறது அந்த சமயம் ஒரு சிறுவன் அந்த கும்பலின் தலைவியை கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறான். நாட்கள் செல்ல செல்ல அந்த ரவுடி வேலூரில் சட்டமன்ற உறுப்பினராக வளர்கிறான் ..நம்ம ஹீரோ அவரின் வளர்ப்பு மகனாக இருக்கிறான் … சமுத்திரகனி சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகிறார்… இதற்கிடையே ஒரு பெண்ணை முதல் முறையாக பார்க்கும்போதே எங்கோ பார்த்த முகம் என்று அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு கும்பல் அவளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து அவரை காப்பாற்றிய பின், அந்த கும்பல் யார்?, எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, என்பதை தெரிந்துக்கொள்கிறார்.அதன் பின் அந்தப் பெண்ணின் பிரச்சனையை தனது பிரச்சனையாக கையில் எடுத்து, எதிரிகளை பழி தீர்க்க கிளம்புகிறார். இதன் பின் அந்தப் பெண் யார் எதற்காக அவன் அந்தப் பெண்ணுக்கு அவன் உதவி செய்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை…!
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையை, அதே வழக்கமான கமர்ஷியலோடும், வேகத்தோடும் சொல்லியிருக்கிறார். இந்த முறை சில ட்விஸ்ட்களும் அதில் இணைத்துள்ளார். ஒவ்வொரு திருப்புமுனையும் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். அதே சமயம், படத்தில் அளவுக்கு அதிகமானஆக்ஷன் காட்சிகளை வைத்திருக்கிறார்.இயக்குநரை விட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணனுக்கு தான் அதிகம் வேலை செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும், வாகனங்கள் மூலம் விரட்டும் காட்சிகள் என பரபரப்பாக இருக்கிறது.
முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் நடிகர் விஷால், அவர் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. அம்மா செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கலங்கடிக்கச் செய்தும், ஆக்ஷன் காட்சிகளில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் வழக்கமான கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார், தோற்றத்திலும் நடிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனி வழக்கம் போல் தனது நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். அவரின் நடிப்பு ஒரு குரு சிஷயன் பாணியில் இருந்தது.
படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் ஒரளவு சிரிக்க வைக்கிறது. அவரை தொடர்ந்து வரும் நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை சற்று கடுப்பேற்றுகிறது. முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டுகிறது. விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், அனைவருக்கும் சரியான பின்புலம் இல்லாமல் ஒரிரு காட்சிகளில் மட்டும் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் வருவதால், ஒன்றை மட்டும் ஒரே ஷாட்டில் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை வியக்கவும் வைத்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தில் ஒட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
முதன் முறையாக ஒரு கமர்ஷியல் படத்தில் கதானாயகனுக்கு காதல் பாடல்கள் இல்லாமலும் , குத்து பாடல் இல்லாமலும் ஒரு படத்தை இயக்குனர் எடுத்துள்ளார் அதற்கே தனி பாராட்டுகள்.
திருப்பங்கள் நிறைந்த ஒரு கதையை, அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி…!
ஆக்ஷன் காட்சிகளையும், படத்தின் நீளத்தையும் ஒலி அமைப்பில் சிறிது மெனக்கெடலும் போட்டிருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த ரத்னம்.,. ஆக்சன் சென்டிமென்ட்
கலந்த விறுவிறுப்பான ஒரு கமர்ஷியல் படம்..குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.6/5