வல்லவன் வகுத்ததடா திரை விமர்சனம் !
இயக்குனர் – வினாயக் துரை
நடிகர்கள் – தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யா.
இசை – சகிஸ்னா சேவியர்
தயாரிப்பு – வினாயக் துரை
open பண்ணா!
ஒருவன் தன் பொருளாதாரத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நேர்மையான முறையில் தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான், இவனுக்கு நேர் மாறாக சிலர் பணம் தான் முக்கியம் அதை எந்த முறையில் வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகின்றனர், இப்படி இருக்கையில் இந்த ஆறு நபரின் வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் சந்திக்கிறது , நல்ல கதாபாத்திரத்துக்கு என்ன ஆனது என்பதை ஹைபர் லிங்க் முறையில் உருவாக்கியுள்ளனர் இதுவே ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை.
படத்தில் ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாக மற்றும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தேஜ் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன் நடித்துள்ளனர். அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், முதல் முறையாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி மேனரிசத்தோடு நடித்து அதிகம் கவனம் பெறுகிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து தயாரிப்பாளரின் நிலை அறிந்து, குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் தனது கேமராவை பயணிக்க வைத்திருந்தாலும், கதைக்கு ஏற்ப தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியருக்கு மெட்டமைக்க வாய்ப்பில்லை என்றாலும், காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு கைகொடுத்திருக்கிறார். ஆறு கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி வரும் கதையை எவ்வித குழப்பமும் இன்றி ரசிகர்களிடம் கடத்தியிருக்கும் படத்தொகுப்பாளர் அஜயின் பணி நேர்த்தி.
எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.எந்த சூழல் வந்தாலும் நேர்மையை தவற விடக் கூடாது எண்கின்ற பொதுக்கருத்தை இந்த படத்தில் இயக்குனர் சொல்லியிருக்கிறார் ஆனால் சில காட்சிகள் யூகிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற சில சிறு குறைகள் இருந்தாலும், முழு படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், நேர்மை தவறேல் என்பதே இந்தப்படத்தின் முக்கியக்கருத்து.
நம்ம tamil prime news ரேட்டிங் 3.2/5