ரெபல் திரை விமர்சனம் !
இயக்குனர் – நிகேஷ் ஆர் எஸ்
நடிகர்கள் – ஜி வி பிரகாஷ்குமார் , மமிதா பைஜு , கருனாஸ்
இசை – ஜி வி பிரகாஷ்குமார்
தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் – ஞானவேல் ராஜா
1980 களில் தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்யும் மக்கள் தங்களது கஷ்டம் பிள்ளைகளுக்கும் வந்து விட கூடாது என்பதற்காக பல கஷ்டங்களை தாண்டி அவர்களை கல்லூரிக்கு படிக்க அனுப்பி வைக்கிறார்கள் , இன்னிலையில் அவர்கள் படிப்பதற்காக கேரள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்கின்றனர் , ஆனால் அங்கு அவர்களுக்கு சரியான மரியாதையோ உரிமையோ கிடைக்கவில்லை , ஒரு கட்டத்தில் இது பொறுக்க மாட்டாமல் அங்குள்ள தமிழ் மாணவர்கள் ஒரு கிளர்சி குழுவை உருவாக்கி தங்களுக்கான உரிமையை பெற நினைக்கின்றனர். இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
முதல் முறையாக ஒரு புரட்சி கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார், கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். சமூக போராளி மாணவராக மிரட்டுகிறார்.
இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுவின் முந்தைய படத்தால் அவரது கதாபாத்திரம் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவரை கதாநாயகியாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக கையாண்டு ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள்.
கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இருவரும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், அதைப்பெறுவதற்கு எத்தகைய இன்னல்களையும் தாங்கி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
இந்தப்படம் 1980-ம் ஆண்டு நடக்கும் நிகழ்வாக உள்ளது அதனால் அந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதையை அதிகம் மெனக்கெடலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் , இவரது பணி இந்தப்படத்தில் அதிகம் பேசப்படும். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் இருக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை எழுதியிருக்கும் இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், தமிழ் மாணவர்கள் மீதான கேரள மாணவர்களின் அடக்குமுறை மற்றும் அதற்கு எதிரான புரட்சியை சுற்றி திரைக்கதை அமைத்திருந்தாலும், காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, தொழிலாளர்கள் என எளியவர்கள் மீதான அடக்குமுறையை புரட்சிகளின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ரெபல்’ பொழுதுபோக்க்குக்கான சினிமாவாக மட்டுமில்லாமல் புரட்சியும் செய்துள்ளது..
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5