“சைரன் ” திரைவிமர்சனம்!

“சைரன் ” திரைவிமர்சனம்!

 

இயக்குனர்- அந்தோனி பாக்கியராஜ்
நடிகர்கள் – ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி
இசை – ஜி.வி. பிரகாஷ்
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார்

open பண்ணா!..

ஒருவன் தன் மனைவியை கொலை செய்ததாக கூறி செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறான்.மேலும் தன் மகளை காண முடியாமல் தவித்து வருகிறான் .ஒரு நாள் பரோலில் வெளிவரும் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க காரணமானவர்களை பழி வாங்குகிறார்.இதன் பின் அவர் போலிஸில் பிடிபட்டார இல்லையா என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.

அறிமுக இயக்குநர்களை நம்பி அதில் வெற்றி பெறுபவர் ஜெயம் ரவி.சமீபத்தில் பிரதீப் ஆண்டனியுடன் கோமாளி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். கோமாளி படத்தில் கிளைமேக்ஸில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தவர் இந்த படம் முழுக்கவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் திலக வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இருக்கிறார். விஸ்வாசம், சர்தார் உள்ளிட்ட படங்களில் துணை திரைக்கதையாசிரியராக பணியாற்றிய அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

ஆம்புலன்ஸ் டிரைவரான ஜெயம் ரவிக்கும் காவல் துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷுக்கும் இடையே ஏற்படும் ஆட்டம்…ஜெயம் ரவி தன் மீது உள்ள கொலை பழியை தீர்க்க அவர் எடுக்கும் புத்திசாலி தனமான Revenge லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்..

Siren Box Office Collection Day 1: Jayam Ravi's Tamil Movie A Hit Or Flop?  Check

ஃபிளாஷ்பேக் காட்சியில் சிறிது நேரம் மட்டுமே இளமையான ஜெயம் ரவியாக வருகிறார். காது கேளாத வாய் பேச முடியாத மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவியை தாண்டி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் அதிக பங்கு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
ஆரம்பத்தில் நமக்கு அது ஒத்துப் போகவில்லை என்றாலும் கதை போகும் போக்கில் அவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பிப்பதே அவரது நடிப்பின் வெற்றி என்று சொல்லலாம்.

South News | All You Need To Know About Jayam Ravi and Keerthy Suresh's  Upcoming Thriller Siren | 🎥 LatestLY

இந்தப் படத்தின் கதை போல பல படங்கள் வந்துள்ளது ஆனாலும் திரைக்கதை சொன்னவிதம் இப்படத்தை சற்று காப்பாற்றி உள்ளது..
படத்தின் முதல் பாதியில் யோகி பாபுவின் காமெடியும் , இரண்டாம் பாதியில் சமூக நோக்க சிந்தனைகளை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான டிரிபியூட்டாகவும் இந்த படம் மாறியுள்ளது கூடுதல் சிறப்பு. வில்லன்களாக அழகம் பெருமாள், சமுத்திரகனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் பாடல்களும், சாம் சி.எஸ் பின்னணி இசையும் இந்த படத்தில் பெரிதாக கை கொடுக்கவில்லை , இந்தப் படத்தில் இசைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் போட்டிருந்தால் இன்னும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கும்.இடைவேளைக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடிவது படத்தின் மைனஸ் ..அந்த விதத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செய்திருக்கலாம் .இந்த ஆம்புலன்ஸ் “சைரன்” சத்தம்அதிகம் ..! ஆனால் வேகம் குறைவு..!

First look out of Jayam Ravi's action-drama 'Siren' - The Hindu

மொத்தத்தில் சைரன் கண்டிப்பாக அனைத்து வித ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது..

நம்ம tamilprimenews.com ரேட்டிங்.3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *