ஃபைட் கிளப் திரை விமர்சனம்

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

 

open பண்ணா

வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான்.

நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல் அதைத்தடுக்கிறது. அரசியல் லாபத்திற்காக நடக்கும் விளையாட்டில் நாயகனின் கும்பல் மாட்டிக்கொள்கிறது அதிலிருந்து மீண்டார்களா என்பதே கதை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படம் “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ், விஜயகுமார், கோவிந்த் வசந்தா பெரிய பெயர்கள் ஆனால் படம்?

படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து, டிரெய்லர் எடிட்டிங் கட், இசை, ஒலிப்பதிவு எல்லாமே உலத்தரம். ஆனால் அது மட்டுமே நல்ல சினிமா ஆகிவிடாதே ! படத்தின் முதல் பாதி வடசென்னை அரசியல் சொல்லி நம்மை அந்த உலத்திற்குள் இழுத்துச் செல்கிறது ஆனால் அங்கிருந்து படம் பாதாளம் தாவுகிறது.

உலக சினிமா ஸ்டைல் கதை சொல்லல் ஆனால் ஒரு கதாப்பாத்திரம் கூட மனதில் முழுமையாக பதிவாகவே இல்லை. படம் முழுக்க கஞ்சா, சரக்கு, இரத்தம் இல்லாத ஃப்ரேம்களே இல்லை. அதை வைத்து இறுதிக்காட்சியில் நல்லது சொல்கிறேன் என்றால் சரியாகி விடுமா?

இடைவேளை ஏதோ சொல்ல வரும் படம் இடைவேளைக்குப்பிறகு டிப்ரசன் வர வைத்துவிடுகிறது. படத்தில் நம்மை ஆசுவாசமாக்க ஏதுமில்லை. இதே கதையில் வந்த மெட்ராஸ் வடசென்னை படங்களில் இருந்த தெளிவு இந்தப்படத்தில் இல்லை வருத்தம் என்னவெனில் அதில் சொன்ன கருத்தை தான் இந்தப்படத்திலும் சொல்ல
முயன்றிருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அசத்தியிருக்கிறார். எடிட்டிங் கிருபாகரன்
உலகின் மிகச்சிறப்பான எடிட்டிங் பல இடங்களில் மனிதர் மிரட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் படத்தின் ஆன்மா விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் கண்டிப்பாக பேசப்படுவார்கள்.

டெக்னிகலாக மிரட்டுகிறது ஆனால் படம் பார்த்து முடிக்கும் போது திருப்தி வரவில்லை. நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் ஃபைட் கிளப்

 

நம்ம tamilprimenews.com rating…2.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *