“கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொண்டாட வேண்டும். அவர்களும் ஹீரோ தான்..” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி வேண்டுகோள்!

“கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொண்டாட வேண்டும். அவர்களும் ஹீரோ தான்..” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி வேண்டுகோள்!

 

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நடிகர் ஆரி இருவரும் இந்தப்படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் பேசும்போது, “ஜித்தன் ரமேஷ் என்கிற ஒரு நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட படம் இது. எனக்கும் அவருக்கும் நான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த காலத்திலிருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. படப்பிடிப்பை கிட்டத்தட்ட பத்து ஷெட்யூல்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தாங்க முடியாத கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு அறையில் காட்சிகளை படமாக்கியபோது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வெளியே வந்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொண்டு அதன்பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்காக கீழே வந்து விடுவார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “இயக்குனர் அபிலாஷுடன் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்தேன். இடையில் பிரேக் விட்டபோது கூட எதற்காக படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும்போது இப்படி நிறுத்துகிறார்கள் என்று நினைக்கும் அளவிற்கு படு வேகமாக கதை நகர்கிறது. அது மட்டுமல்ல இயக்குநர் அபிலாஷ் இந்த படத்திற்காக ஒவ்வொரு காட்சிகளையும் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது பற்றியும் விளக்கிக் கூறினார். படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.” என்றார்.

நாயகன் ஜித்தன் ரமேஷ் பேசும்போது,

“நானும் அபிலாஷும் எப்போது ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது தாய்நிலம் என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். முதலில் கதையை சொல்லுங்கள் நல்லா இருக்கா இல்லையா என்று அப்புறம் சொல்லலாம் என்று கூறினேன். ஒரு மணி நேரம் கதை சொன்னார். ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் முடித்தபோது ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக கதை இருந்தது.

90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல இந்த படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது.

இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவுசப்பச்சன் சாரின் கடின உழைப்பால் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகுமபோது நிச்சயம் பின்னணி இசை ஹிட் ஆகும்” என்று கூறினார்.

Route No.17 Movie Audio launch | jithan ramesh, Aari Arjuna - YouTube

நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்கு தான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *