பார்க்கிங்…திரைப்படம் ஒரு பார்வை.
Open பண்ணா..
ஹரிஷ் கல்யாண்(ஈஸ்வர்) ஐடி ல வொர்க் பண்ணுறார்.அவர் தன் காதல் மனைவி சிந்துஜா வோடு சென்னையில் வாடகைக்கு குடி வருகிறார்..
கீழ் வீட்டில் MS பாஸ்கர் மனைவி மற்றும் மகளோடு 10 வருடமாக வாழ்ந்து வருகிறார்..
லஞ்சம் வாங்காத அளவுக்கு அதிகமாக சிக்கனமான நபர் ..கீழ் வீட்டில் உள்ள இந்த குடும்பத்துடன் பேசி பழக ஹரிஷ் தன் மனைவியோடு வருகிறார்..!!
அறிமுகம் அதன் பின் வரும் சில காட்சிகள் யதார்த்தம்..
ஒரு நாள் ஹரிஷ் pregnent ஆக இருக்கும் இந்துஜாவை hospital ஆட்டோவில் அழைத்து செல்கிறார்…ஆட்டோ ரோட்டில் குலுங்கி செல்கிறது…! இதனால் பிறக்க போகும் குழந்தைக்கு பாதிப்பு வரகூடாது என்பதற்காக… மனைவியை வெளிய அழைத்து செல்ல மனைவிக்கு பிடித்த ப்ளூ கலர் மாருதி கார் வாங்கி வீட்டுக்கு கொண்டு வருகிறார்…!
வீட்டின் முன்னே bike நிறுத்தி இருக்கும் MS பாஸ்கரிடம் பைக்கை நகர்த்தி வைக்க சொல்ல அவரும் செய்கிறார்… அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் சின்ன சின்ன சில சம்பவங்கள் இரு வரையும் கோபப்பட வைக்கிறது.
சிறிய கோபம் முற்றி ஈகோ எட்டி பார்க்கிறது… வீட்டு ஓனர் இளவரசு car இருப்பவர்க்கு இடம் கொடுத்து விட்டு two wheeler ஓரமா விடுங்க என்று பஞ்சாயத்து பண்ண….அடுத்த நாளே புத்தம் புது ரெட் கலர் மாருதி கார் வாங்கி வீட்டு பார்க்கிங் ல நிறுத்தி விடுகிறார் இளம்பரிதி…!
அதன் பின் ஈஸ்வருக்கும் இளம்பருதிக்கும் நடக்கும் ஆடுகளம் தான் பார்க்கிங்..
படத்தின் அருமையான திரைக்கதை..!!
Sam CS இசை படத்துக்கு பெரிய பலம்…
ஹரிஷ் மனைவியாக வரும் இந்துஜா கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
MS பாஸ்கர் மனைவி ரமா rocks… அப்பா மேல் அதிக பாசமுள்ள மகளாக வரும் பிரதனா நாதன் அழுத்தமான நடிப்பு…!!
காட்சிக்கு காட்சி இரு துருவங்களாக மிரட்டுகின்றனர். இரண்டாம் பாதியில் நடக்கும் சம்பவங்களில் violence தவிர்த்து இருக்கலாம்.!!
படத்தின் ஆணிவேர் இந்த “ஈகோ” தான்..இந்த பார்கிங் பிரச்சனையை பெரு நகரங்களில் சந்திக்காத நபர்களே இருக்க முடியாது..
MS பாஸ்கர் ஈடு இணையற்ற நடிப்பு… லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிக்கு இருக்கும் திமிர்..மகளிடம் பாசக்கார அப்பா மனைவியிடம் ஆண் என்கிற ஆணவம்… ராக்கிங் performance!!
இயக்குனர் ராம்குமார் மலையாள திரைப்படங்கள் போல யதார்த்த குடும்பங்களில் நடக்கும் சின்ன விஷயங்களை அழகான திரைக்கதை மூலம் நகர்த்தி நம் மனதில் அவருக்கென்று ஒரு இடத்தை “பார்க்” பண்ணிவிட்டார்..
Hats off பார்க்கிங் team
நம்ம tamilprimenews.com Rating…4.2/5