தேனிசைத்தென்றல் தேவா இசையமக்கும் ‘வா வரலாம் வா’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

தேனிசைத்தென்றல் தேவா இசையமக்கும் ‘வா வரலாம் வா’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். வில்லனாக “மைம்” கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.இவர்களுடன் சிங்கம் புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இடிமின்னல் இளங்கோ என பிரபலமானவர்களே பணியாற்றி உள்ளனர்.

ஏற்கனவே ‘வா வரலாம் வா’ படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி “வா வரலாம் வா” திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது  , இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது

அந்த நிகழ்வில்

கதானாயகி மஹானாசஞ்சிவி பேசியதாவது,

‘வா வரலாம் வா’ படத்தின் டைட்டிலை போல படமும் பாசிடீவாக வந்துள்ளது, இந்தப் படத்தை நம்பி திரையரங்கிற்கு வரலாம். தயாரிப்பாளர் யார் மனதையும் புண்படுத்தாமல் இந்தப் படத்தை எடுத்து முடித்தார், எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி , அதே போல் இயக்குனர் ரவிச்சந்திரன் சார் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வருவார், கடின உழைப்பை கொடுத்துள்ளார், படத்தில் நிறைய கதாபத்திரங்கள் உள்ளது அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவா சாரின் படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, அனைவருக்கும் நன்றி,

கதா நாயகன் பிக்பாஸ் பாலாஜி பேசியதாவது,

பிக்பாஸ் மூலம் என்னை சிலருக்கு தெரிந்திருக்கும், அதற்கு முன்பு பல ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் ,அதற்கு முன் மாடலாக நடித்துள்ளேன், நான் கதானாயகனாக நடிக்க 10 வருடங்கள் ஆனது , எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு என் மிகப்பெரிய நன்றி , அதே போல் என்னை கதானாயகனாக தேர்வு செய்த இயக்குனர் ரவிச்சந்திரன் சாருக்கும் நன்றி, என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் அனைவரும் என்னை விட அதிக அனுபவமுள்ளவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு அனைவருக்கும் நன்றி , சிரு வயதில் நான் தேவா சாரின் பல பாடல்களை கேட்டுதான் வளர்ந்தேன் இன்று அவர் இசையமக்கும் படத்தில் நான் நடிப்பது எனக்கு பெருமை, என் முதல் படத்திற்கு உங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றி,

Va Varalam Va | பிரம்மாண்ட இசை வெளியிட்டு விழாவிற்கு தயாரான "வா வரலாம் வா"!  - Seithipunal

மோகன் ஜி பேசியதாவது,

இந்தப் பட தயாரிப்பாளர் தான் என் திரவுபதி படத்தை ரீலீஸ் செய்தார், சினிமா மீது அதிக அன்பு கொண்டவர் , இந்தப் படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் , தேவா சாரின் பாடல்களை நான் சிறு வயதில் இருந்தே கேட்டவன் , அவருடன் இந்த மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது, இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள், சிரு படங்கள் வெற்றி பெற நல்ல கதையம்சம் வேண்டும் , என் படங்கள் அனைத்தும் சிறு முதலீட்டு படங்கள் தான் ஆனால் அனைத்தும் பெரும் வெற்றியை சேர்த்தது , எனவே கதைதான் அதை முடிவு செய்யும் , இந்தப் படமும் அதே போல வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *