ரெய்டு திரை விமர்சனம் !

ரெய்டு திரை விமர்சனம் !

 

 

இயக்கம் – கார்த்தி

விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா

 

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து தீபாவளி யை முன்னிட்டு வெளிவந்துள்ள படம் ரெய்டு

 

விக்ரம் பிரபு போலீஸ் ஆபீசர்…அவர் தன் பணியில் பல ரவுடிகளை என்கவுன்டர் செய்கிறார்..அந்த என்கவுன்டர் எதற்காக எந்த சூழலில் என்பதை ஒவ்வொன்றாக அவிழ்கிறார் இயக்குனர். ரௌடி போலீஸ் இடையே பொதுவாக நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதைக்கரு.

 

கன்னடத்தில் ஹிட்டடித்த டகரு படத்தை கொஞ்சம் டிங்கரிங் பார்த்து ரெய்டாக மாற்றியுள்ளனர். ஆனால் அதையும் சரியாக மாற்றாமல் ரசிகர்களை சோதித்துப்பார்த்து விட்டனர்.

கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார். திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான இறப்புக்கும், நாயகனின் இந்த நிலைக்கும் யார் கரணம்? இது தான் படத்தின் கதை…

 

சின்னக்குழந்தை கூட, க்ளைமாக்ஸை கணித்து எளிமையான விடக்கூடிய கதை. அதை உருவாக்கிய விதமோ அதை விட மோசம். இயக்குனர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார். டகருவை அப்படியே தந்திருக்கலாம் கொஞ்சமாவது தப்பித்திருக்கும்.

 

நான் லீனியர் வகையில் கதை சொல்கிறார்கள், ஆனால் அது எதற்கு என்பது கடைசி வரை பிடிபடவில்லை. ஒரு போலீஸ் ரௌடி வேடத்தில் அலைகிறார் பின் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் எனும் ஒன்லைன் எல்லாம் ஒகே தான் அதை சொன்ன விதம் தான் கொடூரம்.

படத்தின் திருப்பங்கள், மேக்கிங், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என எதிலுமே எந்த சுவாரஸ்யமும் இல்லை. கடமைக்கென படத்தை எடுத்துள்ளனர்.

 

விக்ரம் பிரபு லுக், நடிப்பு என எல்லாமே படு மோசம். டானாக்காரன், இறுகப்பற்று என மனதை கொள்ளை கொள்ளும் படங்களை தருவது அவரது கேரியருக்கு நல்லது. ரெய்டு போன்ற படங்களை தவிர்ப்பது தான் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நல்லது.

 

 

 

tamilprimenews.com rating..2.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *