வித்தியாசமான கதாபாத்திரத்தில் விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’ !

வித்தியாசமான கதாபாத்திரத்தில் விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’ !

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

Vidaarth and Yogi Babu join hands for Kuiko- The New Indian Express

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் போஸ்டர், டீஸர், டிரைலர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் மாதம் குய்கோ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *