இனிமேல் என் படங்கள் திரையரங்கில் வெளியாகாது ! இயக்குனர் அல்போன்ஸ் அறிவிப்பு!

இனிமேல் என் படங்கள் திரையரங்கில் வெளியாகாது ! இயக்குனர் அல்போன்ஸ் அறிவிப்பு!

நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் தான் பிரேமம். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. பிரேமம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது கிஃப்ட் எனும் படத்தை இயக்கி வந்தார்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

 

தனக்கு autism spectrum disorder இருப்பதாக கூறி, இனி சினிமா தியேட்டர் வாழ்க்கையில் இருந்து விலகி கொள்வதாகவும், பாடல்கள் மற்றும் குறும்படங்கள் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  மேலும் அவரது ரசிகர்கள் இந்த தகவலை கேட்டதிலிரிந்து வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *