விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

Vishal files a plea against cancellation of Nadigar Sangam election | Tamil  Movie News - Times of India

இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFC யை அனுகவேண்டிய அவசியம் இல்லைதமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் அவர்களால் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு, தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *