விஜய் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் ! லோகெஷ் கனகராஜிற்கு கண்டனம் தெரிவித்த கே. ராஜன் !

விஜய் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் ! லோகெஷ் கனகராஜிற்கு கண்டனம் தெரிவித்த கே. ராஜன் !

பி கே பிலிம்ஸ் தயாரிக்கும் “அம்புநாடு ஒன்பதுகுப்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இந்த விழாவில் கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், அன்புசெழியன், விடுதலைசிறுத்தைகள் சங்கதமிழன், தமிழா தமிழா பாண்டியன், மகிழ்னன், மைனர் வீரமணி, பேரலை இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கதையின் நாயகனாக சங்ககிரி மாணிக்கம், நாயகியாக ஹர்சஷிதா, பிரபுமாணிக்கம், மதன் ரமேஷ் மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில்

இயக்குனர் ராஜாஜி பேசியதாவது,

“ஊரார் வரைந்த ஓவியம்” நாவலை அடிப்படையாக வைத்து கிராமங்களில் இரண்டு சமூகங்களில் நடக்கும் ஜாதி ஒடுக்குமுறை பற்றி உருவாக்கப்பட்டுள்ள தமிழ்சினிமாவில் “அம்புநாடு ஒன்பதுகுப்பம்” மிக முக்கியமான படம் இது புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் நிஜத்தில் இருக்கும் ஒன்பது நாட்டு ஊர் தலைவர்களை பற்றி படம் பேசுகிறது. இந்தப் படம் சமூகத்தில் ஒரு நல்ல முயற்சியை எடுத்து வைக்கும் என்று நம்புகிறேன், கண்டிப்பாக இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் , தயாரிப்பாளருக்கும் எனது குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது,

திரைப்படங்களால் பல நல்ல விஷயங்களை செய்ய முடியும் , சமுதாயத்திற்கு தெவையான கருத்துகளை பல திரைப்படங்கள் எடுத்துரைக்கின்றனர். இந்தப் படமும் அது போல ஒரு படமாக இருக்கும், பணம் சம்பாதிக்க படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும், நடிகர்கள் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் அதிலும் விஜய் போன்ற நடிகர்கள் அனைத்து பொறுப்புடனும் பேசிருக்க வேண்டும், இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க அவர் ஒரு முயற்சியை எடுக்க வேண்டும், இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்

ஊரார் வரைந்த ஓவியம்" நாவலை தழுவி எடுக்கப்பட்ட "அம்புநாடு ஒன்பதுகுப்பம்" -  Tamilveedhi

கந்தர்வக்கோட்டை, கரம்பகுடி பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது “அம்புநாடு ஒன்பது குப்பம்”

படத்திற்கு ஒ.மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார் , அந்தோனிதாசன் பின்னனி இசை , ஜேம்ஸ் வசந்தன் எடிட்டிங் , பன்னீர்செல்வம் பாடல்கள்களை லாவரதன், கடல்வேந்தன் மேற்கொள்கின்றனர் , இந்தப் படத்தின் திரைக்கதை, இயக்கத்தை ராஜாஜி மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *