மதுவை ஒழிக்கும் முயற்சியான மன்சூர் அலிகானின் “சரக்கு” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

மதுவை ஒழிக்கும் முயற்சியான மன்சூர் அலிகானின் “சரக்கு” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது!கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன் மன்சூர் அலிகானை பாராட்டி பேசினார்கள்!

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

இந்நிகழ்வில்

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது,

இந்த பொன்னாடை பயன்படாத பன்னாடை. எப்போதுமே மன்சூர் ரிஸ்க் எடுப்பார். இப்போது உள்ள இளைஞர்கள் இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள். சாக்கடை, சாணி என எல்லாவற்றிலும் இப்போதைய இளைஞர்கள் குடித்து விழுந்து கிடக்கிறார்கள். குடும்பத்தை கெடுத்து, தாய்மார்களை அடித்து என இந்தக்குடியால் நாடு மோசமாகி விட்டது. கல்லூரி மாணவிகள், ஐடி பெண்கள் ஆகியோர் குடிக்கிறார்கள். தங்கமான தங்கச்சி படம் எடுத்தேன். அதில்தான் முதன்முறையாக சரத்குமார் அறிமுகமானார். எல்லோரும் சூரியன் திரைப்படம் அவருக்கு முதல் என்று சொல்வார்கள். வெற்றி பெற்ற படத்தைத்தானே இங்கே முன்நிறுத்துவார்கள். அந்தப்படத்தில் மன்சூரை வில்லனாக போட்டேன் .  காட்சி ஒன்றில் சரத்குமாரை கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். அவரை மன்சூர் குத்த வேண்டும். சரத் அப்போதுதான் ஆபரேஷன் முடித்து, 6 மாதங்கள் இருக்கும். ஒரே குத்தாக மன்சூர் குத்த, சரத் ஒரு 2 மணி நேரம் துடிதுடித்து போய்விட்டார்.” என்று பேசினார்.

மன்சூர் அலிகானின் பேசியதாவது,

‘இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் , இது சமுதாயப் பிரச்சினை பற்றி பேசும் ஒரு படம், மது நம் மக்களை எவ்வளவு பாதித்துள்ளது தாய் மார்களின் பல துயரங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது, பல வடநாட்டு தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர் நம் மக்கள் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர் , அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இந்தப் படம் இருக்கும், மேலும் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி படம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் , இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்’  என்றார்

Sarakku Movie Audio Launch - YouTube

மிகப்பெரிய பொருட்செலவில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பரபரப்பான பாடல்களை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறது “சரக்கு”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *