Mark Antony திரை விமர்சனம்!
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா மற்றும் பலர் நடித்து வெளி வந்துள்ள படம்.
மார்க் ஆன்டனி படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
தயாரிப்பாளர் : எஸ்.வினோத் குமார் – மினி ஸ்டுடியோ
இசை: ஜி.வி.பிரகாஷ்
Open பண்ணா ..
வருடம் 1975 ஆம் ஆண்டு தொடங்கும் முதல் காட்சி…விஞ்ஞானியான சிரஞ்சீவி (செல்வராகவன்).மனைவி தன் உடைந்த காலுடன் டீ கொண்டு வந்து கொடுக்கிறார்..
விஞ்ஞானி கடந்தக் காலத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டு பயணிக்கக்கூடிய தொலைபேசியை டைம் டிராவிலிங் மிஷின் மூலம் வெற்றிகரமாக கண்டுபிடிக்கிறார் ..முதல் முயற்சியாக அந்த மெஷின் மூலம் தான் மனைவி காலை விபத்திலிருந்து காபபாற்றி நார்மல் நிலைக்கு கொண்டு வருகிறார் .. அந்த டைம் டிராவிலிங் போனை தன் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு கிளப்பிற்கு செல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் சீரஞ்சீவி இறந்து விடுகிறார்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1995 இல், மறைந்த கேங்ஸ்டர் ஆண்டனியின் விஷால் மகன் மார்க் (விஷால்) மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஜாக்கிபாண்டியன் (எஸ்.ஜே. சூர்யா)அவர் மகன் மதன் பாண்டி ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. ஆண்டனியின் மகன் மார்க் தொழிலில் மெக்கானிக்காக வளரும் போது, ஜாக்கியின் மகன், மதன் பாண்டி (எஸ்.ஜே. சூர்யா) ஒரு கேங்ஸ்டராக வளர்கிறார். ஆண்டனி எப்படி இறந்தார்? ஏன் மார்க் தந்தை ஆண்டனியை வெறுக்கிறார் என்பதற்கான காரணத்தை நாம் அறிய தொடங்கும் போது கதை விறுவிறுப்படைகிறது
ஆண்டனி (விஷால்) மற்றும் ஜாக்கி (எஸ்.ஜே. சூர்யா) இருவரும் தாதாக்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு எதிரி கேங்க்ஸ்டர் சுனில் உடன் சண்டையிட சுனில் ஆண்டனியை கொன்றுவிட்டு ஊரை விட்டுத் தப்பிச் செல்கிறார். தன் நண்பனைக் கொன்றதற்காக சுனிலை பழிவாங்க வேண்டும் என்பதில் ஜாக்கி உறுதியாக இருக்கிறார். ஜாக்கி ஆண்டனியின் மகன் விஷாலை வளர்க்கிறார், மேலும் அவர் தனது சொந்த எஸ்.ஜே. சூர்யா வை விட மார்க்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இருந்தாலும் தனது தாயின் மரணத்திற்கு தந்தை ஆண்டனி தான் காரணம் என்று மார்க் நம்புவதால் தந்தையை வெறுக்கிறார். இந்த சூழ்நிலையில் காதலி ரம்யாமார்க் மெக்கானிக் என்பதால் தன் தந்தை காரை ரிப்பேர் செய்யும்படி கூற, அங்கே டைம் டிராவல் போன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பின் கதை அட்டகாசமாக நகர்கிறது..கடந்த காலத்தில் தனது தந்தையுடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்ற மார்க், தனது தந்தை ஆண்டனி சந்தித்த பல நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்.
மார்க் கடந்த காலத்திலிருந்து தனது தந்தையை உயிருடன் கொண்டு வர முடிந்ததா? ஜாக்கியின் சுயரூபம் மார்க்கிற்கு தெரிந்ததா? மார்க்,மதன், ஜாக்கி ஆகியோரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? இறுதியில் விஷால் தன் தந்தை அருமையை அறிந்து கொண்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்..
டைம் traveling கதைகள் மிகவும் கவனமாக கையாள வேண்டிய கதை .. அதை தெளிவாக புரிந்து கொண்டு நகைச்சுவை கலந்து தெளிவாக விருந்து படைத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிசந்தரன் . மார்க் மற்றும் மதன் காதலியாக(??) நடித்துள்ள ரிது வர்மா, குறைவான நேரம் இருந்தபோதிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
விஞ்ஞானி சிரஞ்சீவியாக செல்வராகவன், ஏகாம்பரம் வேடத்தில் சுனில், அப்பா விஷாலுக்கு ஜோடியாக அபிநயா இவர்கள் மூவரும் சிறப்பான நடிப்பு. ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா ஆகியோர் இந்த அறிவியல் கேங்க்ஸ்டர் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிரார்கள்
பீட்டர் ஹெய்ன், திலிப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகியோரின் ஆக்ஷன்காட்சிகள் நன்றாக உள்ளது. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அருமை.
s j சூர்யா நடிப்பு அரக்கன் தந்தை மகன் என இரு வேடங்களில் அசத்துகிறார் ..
மகன் ஒரு காட்சியில் அப்பனை கேட்கும் கேள்வியில் தியேட்டர் அதிருகிறது .. விஷால் இரு வேடங்களில் இருவேறு தனி தன்மை காட்டி மிரட்டி உள்ளார் . சில்க் ஸ்மிதாவின் AI மற்றும் CG மூலம் உருவம் உருவாக்கி சில்க் கை மீண்டும் பார்த்த உணர்வு ராக்ஸ் .. தியேட்டர் அள்ளுது ..
படத்திற்க்கு இசை மிக பெரிய பக்க பலம் ..100%பொழுது போக்கு உத்திரவாதம்..
family யோட வந்து என்ஜாய் பண்ணி பார்க்கலாம் .
நம்ம tamilprimenews,com rating 4.2/5