மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் சந்தானம்! ‘கிக்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் சந்தானம்! ‘கிக்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், கிக் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், முத்துக்காளை, கிங் காங், கூல் சுரேஷ், நடிகைகள் தான்யா ஹோப், ராகினி திவேதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

நடிகர் சந்தானம் பேசியதாவது

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிடி ரிட்டன்ஸ் வெற்றிக்கு பிறகு சந்திக்கிறேன். எனக்கு இயக்குனர் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். சென்னை தமிழும், கர்நாடக தமிழும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். எனக்கு அந்த ஸ்லாங் ரொம்ப பிடித்தது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விஷயமல்ல. எனக்கே இந்த படம் ரொம்ப வித்தியாசமான படமாக தான் இருக்கும். ஈகோ இருக்கும் இரண்டு பேர் வெற்றி பெறும் கதை என்று உதாரணமாக, விஜயின் குஷி படத்தை சுட்டி காட்டி பேசியவர், நான் நிறைய படத்தில் ஹீரோவுடன் இருந்து கதையை கொண்டு போவேன். அந்த மாதிரி இந்த படத்தில் நான் ஹீரோவாக இருக்கும் போது தம்பி ராமையா அந்த ரோலில் நடிக்கிறார் என்றும், நிஜாம் பாக்கு விளம்பரத்தை சுட்டி காட்டி ஒவ்வொரு விதமாகவும் முகம் மாறும் என்று ஜாலியாக தம்பி ராமையாவை கலாய்த்து பேசினார்.

செந்தில் அண்ணனை பற்றி என்ன சொல்வது? கவுண்டமணி சார் எல்லாத்தையும் சொல்லிட்டாரு… அவங்க காம்போ ரொம்ப பிடிக்கும். எல்லா தெருவிலும் துரு துருன்னு ஒரு குழந்தை இருக்கும். அதை எல்லாருக்கும் பிடிக்கும். அது போல தான் மன்சூர் அலிகான். கிக் காங்கை வைத்து காமெடி பண்ணுவார் என்றும், அசாம் லாரி ஓட்டுவது போல் துப்பட்டா போட்டிரீக்கிறான் என்று கூல் சுரேஷை கலாய்த்தார். கோவை சரளா மேடத்துடன் நிறைய ஜாலியான காட்சிகள் இருக்கிறது. அரண்மனை படத்தை போல இந்த படத்துலயும் நிறைய டயலாக்ஸ் இருக்கிறது எனவும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார். டிடி ரிட்டன்ஸ் படத்தை மறந்துடுங்கள். இது வேறு படம். 4 மாதம் பாங்காக் போன அனுபவம் குறித்து பேசியவர், ஜாலியாக ஒர்க் பண்ணோம். பட்டாயா போனோம். நல்லா இருந்தது. ஆனால் இங்கு எல்லாரும் ஏகப்பத்தினி விரதம் தான். தமிழ், கன்னடத்தில் கிக் படம் ரிலீஸ் ஆகிறது‌.


உதயநிதி சினிமாவில் வெற்றிபெற காரணமாக இருந்த நீங்கள், அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட ஆசை உள்ளதா என சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இது அன்பான கேள்வியா.. இல்லை ஆப்பு வைக்குற கேள்வியா? இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று கூறினார். இந்த படத்தில் காமெடியன்கள் எல்லாரும் இருந்தாலும், இந்த படத்தில் சந்தானத்தை ஹீரோவாக காட்டியுள்ள படம். கிக் – 100 வயாகராவுக்கு சமமான விஷயம். ஒரு பாடலில் நிறைய பெண்களுடன் டான்ஸ் ஆடியதால் செந்தில் சார் ரொம்ப சந்தோஷமாக இருந்தாரு. அதை கவுண்டமணி அண்ணட்ட போன் பண்ணி சொன்னாரு என்று கலாய்த்து பேசினார் சந்தானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *