ஒருவர் மட்டுமே நடித்த “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

Sai Baba Pictures சார்பில், இயக்குநர், நடிகர் ஜி. சிவா நடித்து தயாரித்துள்ள திரைப்படம் “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” . இந்திய திரையுலகில் மிக அசாதாரண முயற்சியாக ஒரே ஒரு கதாபாத்திரம் பங்குபெறும் இப்படம் வரும் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை இன்று சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

இசையமைப்பாளர் மணிசேகரன் செல்வா பேசியதாவது,
இது எனக்கு முதல் படம் , இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சிவா சாருக்கு நன்றி, இந்தப் படத்தில் நிறைய விறுவிறுப்பான காட்சிகள் உள்ளது. அது போல பல டிவிஸ்ட்கள் காத்திருக்கிறது உங்களுக்கு பிடிக்கும். ஸ்டண்ட் காட்சிகளில் சிவா சார் அருமையாக நடித்துள்ளார், படம் நன்றாக வந்துள்ளது நான் படம் பார்த்துவிட்டேன் , உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள்தான் மக்களிடம் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி.

ஒளிப்பதிவாளர் ஒகி ரெட்டி பேசியதாவது,
இந்தப் படம் ஒரு வித்தியாசமான முயற்சி, எனக்கும் இது கடினமான முயற்சிதான், இது போன்ற படங்கள் அடிக்கடி வராது இதற்கென்று தனி உழைப்பு கொடுக்க வேண்டும், இந்தப் படத்தில் நாங்கள் ஒரே ஒரு கேமரா மட்டும்தான் பயன்படுத்தினோம், நானும் இயக்குனர் சிவா சாரும் படாத பாடுபட்டோம், சிவா சார் ஒருவரை மட்டும் காட்டுவது சுலபம் தான் ஆனால் அது வீட்டுக்குள், ஆனால் நாங்கள் எடுத்த காட்சிகள் அனைத்தும் வெளிப்புறத்தில் அதுதான் எங்களுக்கு சவாலாக இருந்தது, சண்டை பயிற்சியாளரும் எங்களை போன்று அதிகம் சிரமப்பட்டு வேலை செய்தார், எங்கள் அனைவரின் உழைப்பும் நன்றாக வந்துள்ளது என்று நம்புகிறேன் படம் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும், எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.

இயக்குனர் மற்றும் நடிகர் ஜி. சிவா பேசியதாவது..,
இந்த தலைப்பை வைத்ததற்கு பல விமர்சனங்கள் சந்தித்தேன், இந்த படத்திற்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘நூறு கோடியில் ஒருவன்’ ஆனால் அந்த தலைப்பை நான் கேட்டு பெறுவதற்கு முன்னர் அந்த படமே வெளியாகி விட்டது. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகன் அவருடைய படத்தில் வந்த வசனத்தை இப்படத்திற்கு தலைப்பாக வைத்தது பெருமையாக உள்ளது, இந்தப் படத்தின் தலைப்பிற்கு காரணம் கதையின் அழுத்தம் தான். இந்தப் படம் பொது மக்களுக்கு ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எந்த ஒரு விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் இதனை உருவாக்கியுள்ளோம், படத்தில் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது.நான் பெருமைக்காக சொல்லவில்லை, நான் ஒருவனாக தனியாக சண்டை போடுவது உங்களுக்கு சலிப்பாக இருக்கும் என எண்ணலாம், ஆனால் அப்படி இருக்காது. சண்டை பயிற்சியாளர் இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தார், தனி ஒருத்தர் சண்டை போடுவது எளிது ஆனால் அதை படமாக மாற்றுவது கடினம் அதற்கு அவருக்கு பெரிய பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார், நானும் அவரும் பல இடங்களில் சிரமப்பட்டு இப்படத்தை உருவாக்கினோம், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு, இது போன்ற படங்களில் மக்களை வேறு சிந்தனைக்கு செல்ல விடாமல் இருக்க உதவுவது இசை தான் இப்படத்தில் அது அருமையாக வந்துள்ளது. இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு உறுதுணையாக இருந்தது என் அம்மாதான், எனக்கு உதவியாக சினிமாத்துறையில் யாரும் இல்லை எனக்கு நண்பர்கள் தான் உதவினார்கள், இந்தப் படத்தில் சிவன் உருவம் வந்தது பற்றி பலரும் என்னிடம் விமர்சனம் வைத்தனர், நான் தவறான நோக்கத்தில் அதை செய்யவில்லை மக்களிடம் நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் நான் அதை செய்தேன், நீங்கள் தான் இதை புரிந்து கொண்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *