‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது!!
சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேர்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
இயக்குநர் மடோனா அஸ்வின், “இந்தப் படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறந்த உழைப்பைக் கொடுத்து ‘மாவீரன்’ உலகத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி”.
நடிகை அதிதி பேசியதாவது, ” பத்திரிக்கை நண்பர்கள் படத்தை பற்றி நேர்மையான விமர்சனம் கொடுத்து அதை பார்வையாளர்களுக்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. இயக்குநர் அஸ்வின் சார் சொன்னதை தான் நடித்துள்ளேன். படத்தில் முதல் நாளிலிருந்து எனக்கு ஆதரவு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி! எனக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் பரத் சாருக்கும், உடன் பாடிய எஸ்.கே. சாருக்கும் நன்றி. படம் வெளியான முதல் நாள் திரையரங்குகளில் முதல் ஐந்து நிமிடம் மட்டும்தான் என்னுடைய படம் என்று பார்த்தேன். அதன் பிறகு, பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படத்தை என்ஜாய் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவ்வளவு சிரித்து, இரண்டாம் பகுதியில் அவ்வளவு எமோஷனலாக பார்த்தேன். ஒரு நடிகராக எஸ்.கே. சாரை இந்தப் படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற இயக்குநர் மீது படக்குழு வைத்த நம்பிக்கைதான் காரணம். சரிதா மேம் திறமையான நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. என்னுடைய சக நடிகர் எஸ்.கே சார் அவருக்கு நன்றி. முதல் நாளில் இருந்து எங்களை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்துள்ளார். சினிமா துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர். தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தை பார்த்து ஆதரவு கொடுத்து உங்கள் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு பத்திரிகையிடம் இருந்து நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது. நான் மிமிக்ரி செய்து டிவியில் வந்தவன். காமெடி மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும். எனக்கு அப்படிதான் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்.
என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு பர்ஃபார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான்! மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும். எனக்கும் விஜய்சேதுபதி சாருக்கும் போட்டி என்பதே கிடையாது. அவர் நடிப்பை அப்படி ரசிப்பேன். மிஷ்கின் சார், சுனில் சார், முதல் ட்வீட் போட்ட உதயநிதி சார், ரவிதேஜா சார், யோகிபாபு சாருக்கு நன்றி” என்றார்.