நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

“போடா போடி” படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் “தாரை தப்பட்டை” மற்றும் “விக்ரம் வேதா” போன்ற பல வெற்றிப் படங்களில் நடிச்சிருக்கார். அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று இருக்கார். நடிப்பு மட்டுமின்றி, வரலட்சுமி சமூக பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு வலுவான வக்கீல் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்பது இல்லாமல் பெண்கள் சார்ந்த படங்களின் அதிகமாக கவனம் செலுத்தி வாறார். இவர் தற்போது 50 படங்கள் நடித்து இருக்கிறார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..அது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். I love u guys.. Don’t never stop உங்களை நம்பி. எனது குழுவினருக்கு ஸ்பெஷல் நன்றி ரமேஷ் அண்ணா, ஸ்ரீதர் என் உதவியாளர்கள் சோனி ,பிரபு இல்லாமல் செய்திருக்க முடியாது.

 

எனது பணியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. மற்றும் செய்யாத அனைவருக்கும் நன்றி அது என்னை வளர வைத்தது அல்ல. இன்னும் பல வருடங்கள் வர உள்ளன. இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். நிறுத்த முடியாது..நிறுத்த முடியாது..பின்னோக்கி செல்கிறோம்.. இந்த ரீலை என் குரலால் மீண்டும் உருவாக்க முயற்சித்தேன். அதற்கு ஏற்றதாகத் தோன்றியது சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பம் “ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *