மாவீரன் திரை விமர்சனம்!
Open பண்ணா
கூவம் ஆற்றங்கரையில் ஹீரோ சிவகார்த்திக்கேயன் தாய் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் .. இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்ட நம்ம ஹீரோ நல்ல ஆர்டிஸ்ட் . படம் வரைந்து கதை சொல்லும் அவர் திறமைக்கு தின தீ பத்திரிக்கையில் வேலை வாங்கி தருகிறார் அதிதி சங்கர் ,,
இந்த சூழலில் குடிசை மாற்று வாரியம் இவர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டி கொடுக்கிறது அங்கு குடி அமர வைக்கிறது.
கதை அங்கே ஆரம்பிக்க ,,ஆம் அடுக்கு மாடி குடியிறுப்பில் ஆங்காங்கே விரிசல் விழ கட்டட பொறியாளர் அருவி மதன் அந்த மக்களை மிரட்டுகிறார். மினிஸ்டர் தன் தவறு தெரியாமல் இருக்க உடைந்த பகுதிகளில் விரசல patch work பண்ண அனுப்ப அங்கு வருகிறார் யோகி பாபு அவர் வரும் கட்சிகள் theatre அலறுது..
ஹீரோ வின் தாய் சரிதா அருவி மதன் சிவாவின் தங்கையிடம் செய்த தவறை கூட தட்டி கேட்க பயபடும் மகனை கோபத்தில் திட்டி விடுகிறார். வாழ்க்கையே வெறுக்க சிவா மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சியில் இறங்க.. cut பண்ணா ஹாஸ்பிடல் உயிர் போய் உயிர் வருகிறது நமக்கு இல்ல அவருக்கு..!
அன்று முதல் சிவாவின் காதுகளில் ஒரு அசரீரி குரல் ( அட voice over நம்ம விஜய் சேதுபதி ) ஒலிக்கிறது. மாவீரனுக்கு பயமே கிடையாது உனக்கு எதிரி அமைச்சர் மிஷ்கின். இபாடி காதுக்குள் ஒலிக்கும் குரல் கேட்டு சிவா செயல்பட அமைச்சரை தன்னை அறியாமல் அவமான படுதி விடுகிறார் .. அந்த பகை புகையாக மாறி பற்றி எறிய கோழை வீரனான கதை தான் மாவீரன்..சிவா மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள் நல்ல நகைச்சுவை ஊழல் அமைச்சர் மிஷ்கின் அவர் நண்பர் சுனில் அம்மாவாக வரும் சரிதா நீண்ட நாட்களுக்கு பின் அருமையான நடிப்பு .குரல் கேட்டு அதன்படி வீரமாக செயல்படும் சிவா ஒரு கட்டதில் தன்னை உணர்ந்து நிஜ வீரனாக மாறும் காட்சி நடிப்பு அருமை . இடைவேளைக்கு பின் வரும் காட்சிகள் கொஞ்சம் நீ… ளம் ..அதிகம்
குறைத்திருக்கலாம்
மண்டேலா அளவு இல்லை என்றாலும் குழந்தைகளை கவரும் வகையில் மடோனா அஸ்வின் இயக்கம் வெற்றி பெற்றுவிட்டது …💐
மாவீரன் டீம் அனைவருக்கும்வாழ்த்துக்கள் ..💐✍️
Tamil Prime Ne ratings…3.7/5