விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து ஜூலை 21 அன்று வெளியாகவுள்ள  ஸ்பை த்ரில்லர் படம் ”கொலை”. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் , ரித்திகா சிங்க் மற்றும் மீனாக்ஷி சௌத்ரி போன்றவர்கள் முக்க்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்தப் படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்,சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில்  படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது,

“இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி”.

கலைப்புலி தாணு பேசியதாவது,

“சிறப்பான சூழலாக இன்று அமைந்துள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. இது ‘கொலை’ அல்ல; கலை. அனைவருக்கும் வாழ்த்துகள்”.

Kolai Movie (2022) Cast, Roles, Trailer, Story, Release Date, Poster -  FilmyVoice -

இதில் நடிகர் மிஷ்கின் பேசியதாவது,

“’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். ‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை”.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி பேசியதாவது, “’போர்தொழில்’ படத்திற்கு பிறகு இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கைக் கொடுத்தனர். இந்தப் படத்திற்காக கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரபிரதேசத்தில் பிசினஸ் பாருங்கள் என்று என்மீது நம்பிக்கையாகக் கொடுத்தர் விஜய் ஆண்டனி. அவருக்கு நன்றி”.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *