இயக்குனர் ஷங்கர் வெளியிடும் “அநீதி” படத்தின் டிரெய்லர் வெளியிட்டில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கர் வெளியிடும் “அநீதி” படத்தின் டிரெய்லர் வெளியிட்டில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்கள்!

 

 

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

“‘வெயில்’ படம் முதலே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக ‘அநீதி’ அமைந்துள்ளது. வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

.”

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது…

“என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. விரைவில் இசையமைப்பாளராக நூறாவது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ‘அநீதி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் உங்களது ஆதரவை தாருங்கள், நன்றி.”

 

‘அநீதி’ திரைப்படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடும் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது…

“இப்படத்தை நான் பார்த்தேன், ரசித்தேன். எதார்த்தமாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் இப்படத்தை வசந்த பாலன் எடுத்துச் சென்றிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ‘அநீதி’ திரைப்படம் ஓங்கி ஒலிக்கிறது. தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக இப்படத்தில் வசந்த பாலன் சொல்லியுள்ளார். தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் முதலாளிகளும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை இப்படத்திற்கு அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள அர்பன் பாய்ஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். ஒரு தரமான திரைப்படத்தை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அவர்கள் பணியாற்றி உள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.”

இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது…

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சாருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”

 

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *