பம்பர் படம் லாட்டரி அடிக்குமா!

பம்பர் படம் லாட்டரி அடிக்குமா!

பம்பர் திரை விமர்சனம்.

வேதா பிக்சர்ஸ் சார்பில் S. தியாகராஜா மற்றும் T. ஆனந்தஜோதி தயாரிப்பில் M.செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பம்பர்

களம் தூத்துக்குடி நாயகன் வெற்றி தன் மூன்று நண்பர்களோடு சேர்ந்து சின்ன சின்ன திருட்டு அடிதடி என்று case வாங்கி ஊரில் ரவுடித்தனம் பண்ணிகிட்டு அலையுறாங்க…

இவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏட்டையா கவிதாபாரதி உதவி செய்ய அவரும் திருட்டில் வரும் பணத்தை பங்கு போட்டு கொள்கின்ற யதார்த்த உண்மை உரைகின்றது…

வெற்றியின் மாமன் மகளாக ஷிவானி நாராயணன் வருகிறார்…அவர் வெற்றி பண்ணுற அட்டூழியங்கள் பார்த்து கோபத்தில் இருக்க…

வெற்றியின் தாய் அவளை எப்படியாவது தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட நினைத்து பெண் கேட்டு அண்ணன் வீட்டுக்கு சென்று அவமான பட்டு திரும்புகிறார்….

இந்த சூழலில் ஊருக்குள் புது SP யாக வரும் அருவி மதன் ஊருக்குள் நடந்த கொலையை கண்டறிய குற்றவாளிகளை வேட்டையாடுகிரார்..இவர்களிடம் இருந்து தப்பிய வெற்றி ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து கொள்ள SP பெஞ்சமின் கோவிலுக்குள் சென்று அவரை கைது செய்து இழுத்து செல்கிறார்..சூழல் மத ரீதியாக மாற பெஞ்சமின் வெற்றி மற்றும் அவர் கூட்டாளிகளை விடுவிக்கிறார்… கதை இனிதான் சூடு பிடிக்கிறது

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை விரதம் இருப்பது அந்த தவ காலங்களில் ஏற்படும் மன நிலையில் தவறே செய்யாமல் இருக்கும் வெற்றியின் பக்தி… இதை பார்கும் வெற்றியின் தாய் சந்தோஷ பட ஷிவானி க்கு வெற்றி கிட்ட பரிவு(காதல்) வருகிறது…

பின்னணி இசை அற்புதம்..ஐயப்ப கோஷம் போட்டு பெரிய பாதையில் சென்று வந்து கீழே பம்பை அருகே தங்குகிறார்கள்

..அப்போ அங்கு அருகே ஒரு லாட்டரி வியாபாரி வெற்றிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வெற்றி அவரிடம் ஒரு கேரளா பம்பர் 10 கோடி லாட்டரி சீட்டை 300 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்…அதன் பிறகு தூங்கி விட …

cut பண்ணினா கேரளா புனலூர் தமிழ் ஆள் பாரி நடத்தும் லாட்டரி கடையில் தான் இஸ்மாயில் லாட்டரி வாங்கி வீதி தோறும் கொண்டு போய் விற்கிறார்.. அவர் ஏழ்மை நிலையை சில காட்சிகளில் உணர்த்தி விடுகிறார் இயக்குனர்..

கேரளா கிறிஸ்துமஸ் லாட்டரி பம்பர் குலுக்கல் நடைபெற்று result வருகிறது… பம்பர் அடித்தது பாரியின் கடையில் விற்ற சீட்டு.. அதுவும் இஸ்மாயில் விற்ற சீட்டு என்று அறிந்த பிறகு இஸ்மாயில் அந்த நம்பரை உற்று நோக்கி வீட்டுக்குள் சென்று ஒரு சீட்டை எடுத்து வருகிறார்…அங்க director வச்ச twist அருமை…10 கோடி.சீட்டு விழுந்தது வெற்றி வாங்கிய சீட்டு ஆனால் வாங்கிய இடத்திலேயே. மறந்து விட்டு விட்ட சீட்டை இஸ்மாயில் பத்திரமா வைத்திருக்க..

இப்போ..வறுமை காரணமாக மனைவி பிள்ளைகள் அனைவரும் சீட்டை பயன்படுத்தி வாழ நினைக்க நேர்மையாக இஸ்மாயில் மட்டும் சீட்டை தொலைத்தவரை தேடி புறப்படுகிறார்…

இஸ்மாயில் அந்த லாட்டரி சீட்டை வெற்றியிடம் கண்டு பிடித்து கொடுக்கும் வரை திக் திக் நிமிடங்கள் …

(படம் பார்ப்பவர் seat நுனிக்கு இந்த சீட்டை எண்ணி வந்து விடுவர்).

அதுவரை வெற்றியை பொறுக்கி என்று திட்டிய சொந்த பந்தங்கள் வெற்றிக்கு 10 கோடி பம்பர் விழுந்ததை அறிந்தும் ஓடி வந்து உறவு கொண்டாடும் காட்சி யதார்த்தம்…

வட்டிகாரர் GP முத்து கேரளா சென்று பணம் வாங்கி வர தம் காரை கொடுத்து அனுப்ப வெற்றி நண்பர்கள் மற்றும் இஸ்மாயில் இவர்களோடு திருவனந்தபுரம் செல்கின்றனர்…

10 கோடி பணத்துக்காக அதன் பின் நடக்கும் சம்பவங்கள் கோபம் துரோகம் நேர்மை தமிழனும் மலையாளியும் சாதி மதங்களின் இடையே மனிதம் காப்போம் என்பதை தன் காட்சிகள் மூலம் சொன்னதில் இயக்குனர் செல்வகுமார் ரசிகர்களின் செல்லகுமாரக ஜெயித்து விட்டார்..

இசை கோவிந்த் வசந்தா..அவருடன் bgm கிருஷ்ணா .. படத்தின் பாடல்கள் bgm ரெண்டும் பக்கபலம்…வினோத் ரத்ன சாமி தமிழக கேரளா மண் சார்ந்த அழகை பார்வையாளர் உணர வைத்த மேஜிக்…எடிட்டர் காசி விஸ்வநாதன் பங்கு அளவான கத்திரி அற்புதம்..

Hatsoff பம்பர் team.

Tamil Prime News rating..3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *