மாமன்னன் திரைப்படம் ஒரு பார்வை.

மாமன்னன் திரைப்படம் ஒரு பார்வை.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் பஹத் பாசில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வெளி வந்துள்ளது மாமன்னன்.

 

மாமன்னன் ஒரு பார்வை.

 

Open பண்ணா 10 பண்ணிகளை பட்டியில் அடைச்சு மேய்கிறார் ஹீரோ…(குறியீடு ..கவனிக்க)மறுபக்கம் நடிப்பு ராட்சடன் பஹத்பாசில் சிப்பிபாறை நாய்களை வளர்த்து பந்தயம் விடுகிறார்…வழக்கம் போல தோற்ற தன் நாயை அடித்து கொல்லும் வில்லத்தனம்…(புதுசு..?)

காசிபுரம் reserved தொகுதி MLA மாமன்னன் நம்ம வைகைப்புயல் வடிவேலு ஹீரோவோட அப்பா…அப்பாவிடம் 15 வருடமா பேசாத மகன் நிற்க..ஹீரோயின் அறிமுகம் வசதி இல்லா மாணவர்களுக்கு coaching centre நடத்தும் ஆசிரியை(அப்போ அவங்க வயசு..?)ஒரு சூழ்நிலையில் ஹீரோவின் மேல் காதல் கொள்ளும் வேளையில் பன்றிகுட்டியை

(நாய் முயல் புறா அதெல்லாம் அவங்க…(??)குறியீடு) எடுத்து முத்தம் கொடுத்து…?(ரொம்ப புதுசு) நம்புங்க .!! ஹீரோவின் அம்மாவை கீர்த்தி சந்திக்க ஹீரோ அப்பாவிடம் பேசாமல் இருக்கும் ரகசியம்(??) தெரிகிறது

15 வருடம் முன் நடந்த அர்த பழசான சமூக அநீதி சோக கதைய சொல்ல…ஆ…வ்..(இதுக்கு இம்புட்டா)

next…சமூக நீதி வசனங்கள் பல இடங்களில் documentary effect கொடுக்க வடிவேலுவை நிற்க வைத்து பேசும் அமைச்சர் மகன்

(சமீபத்தில் நடந்த நிகழ்வு ஞாபகம் வந்து போகுது)..

அப்பாவை சேரில் உட்கார வைத்து அதற்காக அடிதடி போட்டு சமூகநீதிய நிலை நாட்டி மூச்சு திணற interval நமக்கு..!!ssshhppaa முடியல..!

புகை பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு விளம்பரம் முடிந்து மீண்டும் படம் தொடங்க அடுத்த சமூக நீதி முழுக்க அரசியல் கட்சி வாக்கு கேட்பது அதற்காக கொலை election ஓட்டு எண்ணிக்கை அரிவாள் துப்பாக்கி சண்டை முழுக்க முழுக்க 59 வருட அரசியல் படத்தின் அப்பழுக்கற்ற தழுவல்…!!!

 

பரியேறிய மாரியை கண்டா வர சொல்லுங்க….!!!

நல்லவேளை உதயநிதி கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்துள்ளார். இது அவர் கடைசி படம் என்று அறிவித்தது கவனத்துக்கு…..!!

எங்க வைகைப்புயல் (மாமன்னன்) வடிவேலு வை serious ஆக பார்க்க வேண்டிய கட்டாயம் ஆனால் அருமை..! பஹத் பாசில் அவருக்கு தீனி பத்தாது..பஹத் நடிப்பு awesome

 

மாரியின் மாமன்னன்

பழைய மொந்தையில் பழைய கள்

(தண்ணி கொஞ்சம் அதிகம்)

சமூக நீதி பேசும் 1001 வது படம்..!

 

Tamilprimenews rating…3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *