இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்படி ஒரு ரகசியமா!!

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரத்தில் கண்டிப்பாக வரும் என அறிவித்தார் கமல்ஹாசன். அதன்படி தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி போன்ற ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் குறித்து அட்டகாசமான தகவல் ஒன்று கசிந்துள்ளது , அதாவது இந்த படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பதாகவும் அவரது காட்சிகள் முன்னரே எடுத்து முடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதுபடத்தின் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்காக படக்குழு அவரது கதாபாத்திரத்தை ஒரு சர்ப்ரைஸாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.