ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

 

ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் ‘ராம் சியா ராம்..’ என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களிலும் மே 29 ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் ஒரே தருணத்தில் இந்தப் பாடல் வெளியாகிறது.

May be an image of 1 person and text that says "RETROPHILES குல்ஷன் குமார் மற்றும் டி-சரிஸ் வழ்ங்கும் டி-சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் ரெட்ரோபைல்ஸ் தயாரிப்பு EXPERIENCE THE ஆதிபுருஷ் POWER OF VINEPOWER a ..FLNE இயக்குனர் ஓம் ராவத் தயாரிப்பு பூஷன் குமார் கிரிஷன் குமார் ஒம்ராவத் ஓம் பிரசாத் சுதார் ராஜேஷ் நாயர் IN THEATRES 16TH JUNE 2023 IN HINDI TELUGU. TAMIL KANNADA MALAYALAM 3D"

ஓம் ராவத் இயக்கியிருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சிரீஸ் பூஷன் குமார்‌ & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *