நடிகர் சங்கம் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தவுள்ளது

நடிகர் சங்கம் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தவுள்ளது

 

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் மனோபாலா. இவருக்கு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மனோபாலா இதற்கான சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மனோபாலா மே மூன்றாம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியது மட்டுமின்றி முன்னணி நடிகர்கள் முதல், தற்போதைய இளம் நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து பணியாகியுள்ளார் மனோபாலா.

تويتر \ Manobala على تويتر: "https://t.co/lkjYLTk7U2"

எப்போதும் தேனீ போல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மனோ பாலா தன்னுடைய கடைசி நாட்களில், உடல் நலம் இன்றி, நிலை குலைந்து அமர்ந்திருக்கும் நிலையில்… அவரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவருக்கு பிடித்த பாடலை அப்பாவின் கைகளை பற்றியபடி, அவரது மகன் ஹரிஷ் பாடியுள்ளார். அப்போது மனோபாலாவுக்கு அவருடைய அசிஸ்டன்ட் சாதத்தை ஊட்டி விட்டு சாப்பிட வைக்கிறார்.

தந்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக அவரின் மகன் பாடிய இந்த பாடலின் வீடியோ தற்போது மனோபாலாவின் youtube தளமான வேஸ்ட் பேப்பர் தளத்தில் வெளியாகி, பார்க்கும் ரசிகர்கள் கண்களையே கலங்க வைத்துள்ளது.

இச்சூழலில் மனோபாலாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வரும் ஞாயிறன்று அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *