நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ஜீ தமிழ் ஒளிப்பரப்பான சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ரியாஸ் என்பவரை நடிகை ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஷாலினி மற்றும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தனது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டுள்ளார்.

Serial Actress Shalini Divorce | Mullum Malarum Shalini Divorce: Actress  Celebrates With A Unique Photoshoot; Says 'I Got 99 Problems But....' -  Filmibeat

ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் நேர்மறை, எதிர்மறை என பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் நடிகை ஷாலினி பதிவிட்ட அந்த பதிவில் “குரலற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம்.

உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *