‘சிவா மனசுல சக்தி’ கூட்டணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பா?

‘சிவா மனசுல சக்தி’ கூட்டணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பா?

 

2009ம் ஆண்டு ஜீவா – சந்தானம் கூட்டணியில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் உருவான படம் ‘சிவா மனசுல சக்தி’. விகடன் டாக்கீஸின் முதல் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவாவை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்த படமும் இதுதான். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராஜேஷ்.எம். காதலும் கலகலப்புமாக இளைஞர்களையும் கவர்ந்த இந்தப் படம் ஒரு டிரெண்ட்செட்டராகவும் அமைந்தது. ஜீவாவிடம் இன்றும் அவரது ரசிகர்கள் பேசச் சொல்லிக் கேட்கின்ற ஒரு வசனம்… ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ என்பதுதான். அதேபோல யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் படத்துக்குப் பக்கபலமாக இருந்தது.

Jiiva & director Rajesh to reunite for SMS sequel?

இது குறித்து இயக்குனர் ராஜேஷ்.எம். பேசியபோது,

“ஜீவா சாருக்கும் எனக்குமே ‘எஸ்.எம்.எஸ்’ மறக்க முடியாத ஒரு படம். அவர்கிட்ட பேசும் போதெல்லாம், நாம மறுபடியும் இணைந்து ஒரு படம் பண்ணலாம்னு பேச்சு வந்திடும். அவரும் ஆர்வமா இருக்கார். ஆனால் அது ‘எஸ்.எம்.எஸ் – 2’ ஆக இருக்காது.இப்போது ஹன்சிகாவை வைத்து வெப்சிரீஸ் ஒன்றை இயக்கி முடித்துவிட்டேன். அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் போயிட்டிருக்கு.

இன்னொரு பக்கம் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் ஜெயம் ரவியின் 30வது படத்தை இயக்கிட்டிருக்கேன். அதோட படப்பிடிப்பு, அடுத்தடுத்த ஷெட்யூல் போயிட்டிருக்கு. அதுக்காக இப்ப லொக்கேஷன் பார்க்க ஏற்காடு வந்திருக்கேன். இந்தப் படப்பிடிப்பு முடிச்சதும்தான் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும். நான் ஜீவாவிடம் பேசிவருவதுதான் ‘எஸ்.எம்.எஸ் – 2’ ஆக பரவியிருக்கிறது. என் இயக்கத்தில் உதயநிதி சார், சந்தானம் சார் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ எப்படி ஒரு மேஜிக்கோ, அப்படி ஒரு மேஜிக்தான், ‘எஸ்.எம்.எஸ்'” என்கிறார் ராஜேஷ்.எம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *