மலையாள நடிகர்கள் ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாஸி ஆகியோருக்கு நடிகர் சங்கம் தடை விதித்தது

மலையாள நடிகர்கள் ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாஸி ஆகியோருக்கு நடிகர் சங்கம் தடை விதித்தது

குடிபோதையில் சுயநினைவு இழக்கும் அளவுக்கு ஷூட்டிங் வரும் அவர்கள் மீது Film Employees Federation of Kerala (FEFKA) மற்றும் Association of Malayalam Movie Artists (AMMA) நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

மலையாள நடிகர்கள் ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாஸி ஆகியோர் நடிகர் சங்கத்தால் தடை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து குடிபோதையில் வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களுக்கு பிரச்சனை கொடுப்பதாகவும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் அதிகம் புகார்கள் வந்ததை தொர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

 


நடிகர் ஷேன் நிகாம் இதற்க்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அவர் 2019ல் வெயில் என்ற படத்தில் நடித்து வந்த நேரத்தில் தயாரிப்பாளருக்கு சொல்லாமல் திடீரென ஹேர் ஸ்டைலை மாற்றியதால் பிரச்சனை ஏற்பட்டது, அதனால் அப்போது தயாரிப்பாளர் சங்கம் அவரை தடை செய்தது.
அதன் பின் தான் சமீபத்தில் RDX என்ற படத்தின் ஷூட்டிங்கில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என சொல்லி படக்குழுவிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் தான் அவர் ஷூட்டிங்கில் drugs பயன்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டு இருக்கிறார்.

 

ஸ்ரீநாத் பாஸி 2022ல் ஒரு படத்தின் விளம்பரத்திற்காக பேட்டி கொடுத்தபோது anchor கேட்ட கேள்வியால் கோபம் அடைந்து அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் சேனல் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது ஸ்ரீநாத் ஒரே தேதிகளை பல தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து பலருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்து இருக்கிறது. தற்போது குடித்துவிட்டு ஷூட்டிங் வருவதராக அவரை தடை செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *