அஸ்வின்ஸ் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது.

அஸ்வின்ஸ் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது.

*ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா (SVCC)
தயாரிப்பு: பிவிஎஸ்என் பிரசாத்
வழங்குபவர்: பாபிநீடு பி
இணை தயாரிப்பு: பிரவீன் டேனியல்
அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் ‘ASVINS’*

வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ‘ASVINS’ படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது. திரைப்படம் வெளியான பின்பு, ஓடிடி உரிமையை மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் நல்ல விலைக்கு வாங்கியுள்ளது.

உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள ‘ASVINS’ திரைப்படத்தின் மூலம் தருண் தேஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இது அவரது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ‘தரமணி’ மற்றும் ‘ராக்கி’ புகழ் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்களின் கூட்டத்தை சுற்றி கதை நடக்கிறது.

வரவிருக்கும் இந்த திரைப்படத்தில் விமலா ராமன், முரளிதரன் (“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படப்புகழ்), சரஸ் மேனன், உதய தீப் (‘நிலா கலாம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் சிம்ரன் பரீக் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைக்கிறார், எட்வின் சகே ஒளிப்பதிவு செய்திருக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பிவிஎஸ்என் பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி வழங்குகிறார் மற்றும் பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *