விஷால் தலைமையிலா நடிகர் சங்கம்! அப்செட் குரல் அதிகமா கேட்குது!
நடிகர் சங்கத் தலீவர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்துச்சு. அது சிலபல அடிதடி பஞ்சாயத்துக்குப் பின்னர், அந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அப்போது, விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுச்சு
மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்துச்சு.
இந்த வழக்கை விசாரித்த சென்னைக்கு நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, லைக்கா நிறுவனம் தரப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுச்சு..ஆனா பெரும்பாலும் தன் பேரில் எந்த சொத்தும் இல்லாத வாழ்க்கை வாழும் ரியல் நடிகர் விஷால் சொத்து விபரங்களை தாக்கல செய்யாமல் டபாய்ச்சு வந்தார்..
இச்சூழலில் தற்போது, இன்னிக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரிச்ச மெட்ராஸ் ஐகோர்ட் , லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்குது
இப்போ ஹூம்ம்.. இந்தாள் தலைமையிலா நடிகர் சங்கம் என்றுஅப்செட் குரல் அதிகமா கேட்குது .