விடுதலை பாகம் 1 – எப்படி இருக்கிறது?
குமரேசன் என்கிற கடைநிலை காவலராக சூரியினை தேர்வு செய்து அவரின் திறமையை வெளிப்படுத்தி கதையின் நாயகனாக இப்படி ஒரு கதைக்களத்தில் வாய்ப்பு அமைத்து தந்தது ..
பெருமாள் வாத்தியாராக விஜய்சேதுபதி, தமிழரசியாக பவானிஶ்ரீ, கடுமையான காவல் அதிகாரியாக சேத்தன், தமிழ், காவல் உயர்அதிகாரியாக மிடுக்கிடும் கௌதம் மேனன், தலைமைச்செயலருக்கான தலையாய பண்புடன் ராஜீவ்மேனன் என திரையில் தோன்றும் அனைவரும் கடின உழைப்பு தந்து நடித்த விதம் விடுதலை தந்த இயக்குனரின் சிறப்பு…!
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒரே ஷாட்டில் எடுத்த 7 நிமிட ஆரம்ப காட்சி முதல் தன் தோளில் கதையின் ஓட்டத்தினை ஒளிப்பதிவு மூலம் சுமந்து திரையில் ஒளிர்கிறார்…
இசைஞானி கதைக்கேற்ற இன்னிசை தந்து நம்மோடு திரையில் இசையாக பயணித்து காட்சிகளுக்கு மேலும் உயிரூட்டியுள்ளார்… (ஆராரிராரோ ) காவல்நிலைய காட்சிகளில் உள்ள கொடுமைகள்…
குமரேசன் செய்வதறியாது அதிகாரிகளை காண அலையும் காட்சிகள் என காட்சிகளில் தவிப்பின் வலி போன்ற தருணங்களில் இசைஞானியின் தாலாட்டும் குரலில் மனதில் அந்த கதாபாத்திரத்தின் ரணம் உணர செய்கிறார் மேஸ்ட்ரோ…!!
கௌதம் மேனன் வந்து ரெய்டு நடத்தும் ஓர் காட்சித்தொகுப்பில் அந்த கதாபாத்திரத்தின் தோரணையை வெளிப்படுத்தும் விதம் ..இசைவடிவில் ஓர் சிறிய மாற்றம் தந்து ஆச்சரியம் தருகிறார்… இசைஞானம் அறிந்த இந்த ஞானதேசிகன்… மீண்டும் கதையின் ஓட்டத்துடன் ஒன்றாகி நம்முடன் இசையாக குரலாக எழுத்தாக கலந்து கொண்டார்…!!!
பிரம்மாண்ட படம் தர புராணம் அல்லது டெக்னாலஜி ஹைபை தரம் , வெளிநாட்டு லொகேஷன் என பல செலவுகள் செய்து படம் தர பல்வேறு தயாரிப்பாளர்கள் உள்ள தளத்தில்…
ஓர் உண்மை சம்பவத்தின் பிரதியாக, எழுத்தாளர் எழுதிய வரிகளை நம் கண்முன்னே காட்சிப்படுத்திட இயல்பான திரைக்கதையில் கடினமான லொகேஷன்,மேலும் உண்மையான உணர்வினை தர நிஜத்தினை நிழலின் வடிவில் காட்சி படுத்தி தரும் இப்படி ஓர் சர்ச்சை நிறைந்த கதைக்களத்தினை திரையில் நம் கண்முன் காட்சிப்படுத்த பெரும் பொருட்செலவு செய்து திரையிட்ட தயாரிப்பாளர் ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட். எல்ரெட் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்…!!
இப்படி ஒரு எழுத்து படைப்பினை நமக்கு திரைப்படமாக தருவது பல இயக்குனர்கள் இருப்பினும் இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய லாக்அப் நாவல் விசாரணை ஆக, கீழ்வெண்மணி சம்பவத்துடன் இணைத்து தந்த வெக்கை நாவலின் திரைவடிவமான அசுரன் என முந்தைய படைப்புகளிலினை போல் இதுவும் துணைவனின் தழுவலாக இருப்பினும்… கடந்த காலங்களில் வெவ்வேறு சமயத்தில் நடந்த நிகழ்வுகளின் மையம் உள்ள சம்பவங்களை எடுத்து அதை ஒன்று சேர்த்து விடுதலையில் இரண்டு பாகங்களாக எடுத்து வந்துள்ளார் இயக்குனர்… நாவலின் தழுவலாக இருப்பினும் திரையில் நம்மை காட்சிகளை வாசிக்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன்.!! அது அவரது இயக்கத்தின் வெற்றி…💐
இரண்டாம் பாகத்தினை உடனே எதிர்பார்க்கும் இந்த வேளையில்…
சிறு சிறு தவறுகள் காட்சிகளில் தெரிவது அதை சொல்லாமல் விடுவதும் தவறு…
1. கௌதம்மேனன் மேல் அதிகாரியாக வருபவர் வட இந்தியர் முகம் ஆனால் அவருக்கு நடராஜன் என்ற பெயர் .?
2. கௌதம் மேனன் பெயர் சுனில்மேனன் அவர் ஷர்ட் பேட்ஜ் ஒரு காட்சியில் சுனில் ஷர்மா என்று இருப்பது…??
3.ஒளிப்பதிவு அருமை .ஆனால் மலை கிராமம் பூம்பாறை என்று ஒரு காட்சியில் தெரிவதும்.? காலகட்டம் தற்போதைய கால வீடுகளாக இருப்பதும்…???
வெற்றிமாறன் போன்ற இயக்குனர் கவனித்திருக்கலாம்.!(உதாரணம் கவனிக்க போத்தனூர் தபால் நிலையம் artwork perfection )
அனைத்தையும் தாண்டி மொத்த விடுதலை பட குழுவினருக்கும்
tamil prime news பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது💐
விடுதலை பாகம் 1. TPN rating..4.1/5