ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரர் நாயகனாக அறிமுகமாகும் புதிய இணைய தொடர்!

ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரர் நாயகனாக அறிமுகமாகும் புதிய இணைய தொடர்!

சமீபத்திய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு பிரபலமான மணிகண்ட ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இணைய தொடரான மை டியர் டயானா என்ற தொடரின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த தொடரை அறிமுக இயக்குநர்களான பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கவிருக்கின்றனர். இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ் உடன் நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இடம்பெறுகின்றனர். ஒளிப்பதிவு பணிகளை வாட்ஸ் பிரபு மேற்கொள்ள, இசையமைப்பை குஹா கணேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இணையத் தொடர் என்பதால் ‘மை டியர் டயானா’ விற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *