கமல்- பிரதீப் – நயன்தாரா- விக்னேஷ் சிவன் வித்தியாசமான கூட்டணி!

அஜித்தால் படத்தில் இருந்து வெளியாகிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக லவ் டுடே படம் மூலம் நடிகராகதன்னை நிரூபித்துள்ள பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ள நிலையில் பிரதீப் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக படம் இயக்கப் போவதில்லை என்றும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நாயகனாக இணையவுள்ள படத்தை உலகநாயகன் கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும், ஆனால் அவர் பிரதீப்பிற்கு ஜோடியில்லை என்றும் தகவல்கள் கசிகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா கையில் தற்போது இரண்டு படங்கள் உள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் ஜெய்யுடன் 75வது படத்தில் இணையவுள்ளார். இதனிடையே தன்னுடைய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு கமல்ஹாசன் தயாரிப்பிலும் முழு வேகத்தில் இயங்கி வருகிறார். சிவகார்த்திகேயன், சிம்பு என முன்னணி நடிகர்களையும், கவின் போன்ற வளர்ந்து வரும் பல நடிகர்களையும் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக கமிட் செய்துள்ளார். இந்த நிலையில் பிரதீப்யையும் அவர் கமிட் செய்து இருப்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *