மீண்டும் இயக்கத்தில் இறங்கும் பாரதிராஜா!

மீண்டும் இயக்கத்தில் இறங்கும் பாரதிராஜா!

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், தமிழில் மூத்த இயக்குனராககவும் அறியப்படும் இயக்குனர் பாரதிராஜா இப்போது நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டது. அதன் பிறகு அவரது நடிப்பு 2கே கிட்ஸ்களால் வரவேற்கப்பட்டது.

பாரதிராஜா தற்போது நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றிலும், நிர்மல்குமார் இயக்கும் ‘நா நா’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்கத்திற்கு திரும்ப இருக்கிறார். கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் முழுமையாக ஈடுபட்டார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘தாய்மெய்’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

Bharathiraja discharged from hospital | Entertainment News,The Indian  Express

இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *