10 கோடி செலவில் சங்கர் படத்திற்கு ஒரு பாடல்!

நடிகர் ராம் சரண், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் RC15. பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு அரசியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக வெளியாக உள்ளது. இந்த படத்தை டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் மார்ச் 19 அல்லது 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன்சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த புதிய ஷெட்யூலில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக சங்கர் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது.

இதனிடையே இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் படத்தில் இருக்கும் பிரம்மாண்ட பாடல்களின் வரிசையில் இந்த பாடலும்கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்குப் பிறகு அடுத்த ஷெட்யூல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

Ram Charan & Kiara Advani shoot for 'costliest song in Telugu cinema' in Pune: Reports | Regional Indian Cinema

RC15 படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 27ஆம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியாகும் என்பது முன்பே கூறப்பட்டது. இந்த படத்திற்கு Senani, CEO போன்ற தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *