ரஜினிக்கு பதில் சிலம்பரசன்!

சிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவுள்ளது. சிலம்பரசன் உடலைக் குறைத்து கச்சிதமாக மாறிய பின் நடிக்கும் இப்படத்தில் மாஸ் ரோலில் நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் டான் கேரக்டரில் மாறுபட்ட வேடத்தில் சிம்பு நடிப்பதுடன், நரைத்த தாடியுடன் தோன்றும் வித்தியாசமான அவரது லுக், அதீத ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இப்படம் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டராக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் அடுத்து என்ன திரைப்படம் செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கிறது. இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எல்லோர் மத்தியிலும் முதல் படத்திலயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த தேசிங்கு பெரியசாமியுடன் இணைய போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதோடு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குவார் என்று கூறப்பட்டது, அனைவரும் ரஜினிகாந்த் – தேசிங்கு பெரியசாமி கூட்டணியை எதிரபார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

Silambarasan TR to join hands with Desingh Periyasamy?- Cinema express

இந்நிலையில் ரஜினிகாந்த்யை இயக்க இருந்த தேசிங்கு பெரியசாமி இப்போது சிலம்பரசனை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *