‘அகிலன்‘ திரைப்படத்தின் மிரட்டல் முன்னோட்டம் இதோ!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
கடல் மற்றும் துறைமுகம் சார் கதையம்சத்தில் அதிரடிக் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது அகிலன் திரைப்படம். அதில் ஹங்கேரியர்களின் கதைக்களக் காட்சிகள் என படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
‘‘இந்த குற்ற உணர்ச்சி, நன்றி, விசுவாசம், கற்பு, ஒழுக்கம் இதெல்லாம் இந்த சமூகம் நம்மள அடிமையாக்கிறத்துக்காகவே உருவாக்கி வச்சிருக்கு‘‘ என ஜெயம் ரவியின் மிரட்டும் பேச்சு, வில்லத்தனம், சண்டைக் காட்சிகள் என படம் இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘அகிலன்‘ திரைப்படத்தில், ஜெயம்ரவியுடன் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெயம்ரவியின் ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் ‘அகிலன்‘ படத்தையும் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்-1‘ திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்து பாராட்டைப்பெற்றுள்ள ஜெயம்ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.
முன்னோட்டம் இணைப்பு: