வரிசையாக கை நழுவி போகும் படங்கள்!

இரட்டை குழந்தைகள் மூலம் ஏற்பட்ட சர்ச்சை, பின் நயன்தாரா ஹீரோயினாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்தது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பட வாய்ப்பும் தவறிப்போய்விட்டது.. இப்படி நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொன்டே இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது.
அதோடு பல படங்கள் நயன்தாராவின் கையை விட்டு நழுவி இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, ஓ2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டு படங்களை நயன்தாராவை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதோடு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரும் நயன்தாராவை வைத்து படமெடுக்க முன்பணம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த படங்களுக்காக நயன்தாராவிற்கு ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படங்களுக்கு நயன்தாராவால் தற்போது கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்துள்ளது. இதனால், நயன்தாராவை இப்படத்திலிருந்து விலக்கிவிட்டு, தான் கொடுத்த முன் தொகையையும் இரு தயாரிப்பாளர்களும் திரும்ப பெற்றுக்கொண்டனர்.இ ப்போது இந்த தயாரிப்பு நிறுவனங்களுடன் நயன்தாரா போட்ட ஒப்பந்தம் ரத்தாகிறது, இந்த இரண்டு நிறுவனங்களுடன் இப்போதைக்கு நயன்தாரா படம் பண்ண போவது இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்கள் கைநழுவிப்போனதினால் ரூ. 20 கோடி சம்பளத்தை இழந்துள்ளார் நயன்தாரா. இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.