திரைப்பட மாஃபியா புரிந்து கொள்ள வேண்டும் – கங்கனா ரனாவத்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரானாவது, தனது தாய் குறித்தும், அவரது வாழ்க்கை முறை குறித்தும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கூடவே அவரது அம்மா விவசாய பண்ணையில் பணிபுரியும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ‘எனது தாய் அவரது மகளின் (கங்கனா) வருவாயில் பிழைப்பவர் அல்ல; அவர் தினமும் 8 மணி நேரம் வரை வயலில் வேலை செய்கிறார். அவருக்கு வெளியில் சாப்பிடுவது, வெளிநாட்டிற்கு செல்வது, மும்பை வாழ்க்கை, ஷூட்டிங்குக்கு என்னுடன் வருவது போன்ற எதுவும் பிடிக்காது. அவரை நான் வற்புறுத்தி அழைத்தால் திட்டுவார்.
சினிமா துறை மாஃபியாக்கள் எனது அணுகுமுறையை பார்த்து என்னை திமிர் பிடித்தவர் என்று அழைக்கின்றனர். ஆனால் இரண்டு ரொட்டி, உப்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி உயிர்வாழ வேண்டும் என்பதை எனது தாய் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். நான் இவ்வாறு இருப்பது ஆணவமா அல்லது நேர்மையா? என்பதை சொல்லுங்கள்.
நான் மற்றவர்களை போல கிசுகிசுக்களில் சிக்கவில்லை. ஹீரோக்களின் அறைகளுக்குச் செல்வதில்லை. அதனால் அவர்கள் என்னை பைத்தியக்காரி என்று கூறுகின்றனர். எனக்குள் இருக்கும் இந்த மனப்பான்மை எங்கிருந்து வருகிறது என்பதை திரைப்பட மாஃபியா புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் கங்கனா உடைய தாயார் அரசுப் பள்ளியில் முன்னாள் சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தது குறிப்பிடதக்கது.