தளபதியை வாழ்த்திய இயக்குனர்!

தளபதியை வாழ்த்திய இயக்குனர்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்து நடிக்கிறார்; இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நடிகர் விக்ரமும், கமலும் கூட இந்தப் படத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி காஷ்மீர் படபிடிப்பை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் தகவல் வருகிறது. .

இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் மிஷ்கின் தான் படப்பில் கலந்துகொண்டது குறித்து தனது அனுபவங்கள் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பது..-

காஷ்மீரில் இருந்த சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட லியோ படக்குழுவினர் கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டை காட்சியை படமாக்கினார். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் காட்டிய அக்கறையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினார். அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜயுடன் ஒரு நடிகனாக இந்தப்படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும், அவரது அன்பையும் நான் என்றும் மறவேன்.

Image

லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின் -அப்படீன்னு கையெழுத்திட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *