லவ்டுடே திரைப்படத்தின் நூறாவது நாள் விழா

லவ்டுடே திரைப்படத்தின் நூறாவது நாள் விழா

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கோமாளி படப்புகழ் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்த லவ்டுடே திரைப்படம் நவம்பர் 4 அன்று வெளியானது.

அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ அமைந்து ரசிகர்களை மகிழ்வித்தது. தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக இந்த படம் அமைந்தது. பலரும் பாராட்டி குவித்த இந்த படத்தை இருக்கும் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்தனர். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணிபுரிந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சத்ய ராஜ், இவானா, ராதிகா உட்பட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

மிகப்பெரும் வெற்றிபெற்ற இந்த படத்தின் 100 வது நாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. படத்தில் பணியாற்றி அனைவருக்கும் கேடயங்கள் அளித்து படக்குழு மகிழ்ந்தனர். எடிட்டர் மோகன், இயக்குனர் ஜெயம் ராஜா, நடிகர் சதீஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் ஆர் பி உதய குமார் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

 

பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது..,

” இந்த படத்தில் இசையை பொறுத்தவரை நானாய் யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் ஏஜிஎஸ் அதற்கு முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு பெரும் உதவியாக இருந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த ஏஜிஎஸ் குழுவிற்கும் நன்றி கூறி கொள்கிறேன். அடுத்து எனது தொழில் நுட்பகுழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்த படத்தை மேம்படுத்தினார்கள். அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவு இந்த படத்தை பெரிய படமாக . மாற்றினார்கள். இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

 

அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது..
” பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்த மேடை மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. லவ்டுடே திரைப்படம் ஒரு நம்பிக்கையை கொடுக்க கூடிய கதையாக இருந்தது. அது தான் படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியானது. அப்போது லவ்டுடே போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள் என்று பலர் கெட்ட போது, இயக்குனர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி கூறிகொள்கிறேன். ”

Image

யுவன் சங்கர் ராஜா கூறியதாவது..,

” இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீப்-க்கும் எனது நன்றி. இந்த படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த படம் ஏஜிஎஸ்-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது, அதற்கு வாழ்த்துகள். இதுபோன்ற பல வெற்றிகளை அவர்கள் அடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *