விஷால் பரத்வாஜ்-ன் அடுத்த புதிய முயற்சி
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் சினிமா துறையும் பெரிதும் பயனடைந்து வருகிறது. பெரிய ஃபிலிம் கேமராக்களை வைத்து ஷூட்டிங் எடுக்கப்பட்ட காலம் போய் கையடக்க கேமரா வரை வந்து தற்போது ஸ்மார்ட்போனிலும் எடுக்கப்பட்டு விட்டது.
தமிழில் கோலி சோடா திரைப்படத்தை Canon EOS 5D டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுத்து அசத்தினார் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன். தற்போது ஸ்மார்ட்போனில் படமெடுக்கும் காலமும் வந்துவிட்டது.
அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது FURSAT. இந்தத் தலைப்புக்கு தமிழில் ஓய்வு நேரம் என்று அர்த்தம் . டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள FURSAT ஓடும் நேரம் சுமார் 30 நிமிடங்கள் தான். ஓம்காரா, மக்பூல் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷால் பரத்வாஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதுவொரு குறும்படம் தான். ஆனால், முழு நீள படம் பார்த்த திருப்தி பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. பெரும்பாலான நேரம் பாடல்களிலேயே கதை நகர்கிறது. ஆனால், அதை சிறப்பாக கையாண்டு அருமையான ஒரு குறும்படத்தை விஷால் பரத்வாஜ் தலைமையிலான குழு கொடுத்திருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள FURSAT ஓடும் நேரம் சுமார் 30 நிமிடங்கள் தான். ஓம்காரா, மக்பூல் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷால் பரத்வாஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதுவொரு குறும்படம் தான். ஆனால், முழு நீள படம் பார்த்த திருப்தி பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. பெரும்பாலான நேரம் பாடல்களிலேயே கதை நகர்கிறது. நிச்சயம் ஷூட்டிங்கில் கடும் சவால் இருந்திருக்கும். ஆனால், அதை சிறப்பாக கையாண்டு அருமையான ஒரு குறும்படத்தை விஷால் பரத்வாஜ் தலைமையிலான குழு கொடுத்திருக்கிறது.
படமாக்கப்பட்ட காட்சிகளையும் ஆப்பிள் தனது யூ-டியூப் சேனலில் தனியாக பதிவேற்றியுள்ளது. அதில் படக்குழுவினரின் உழைப்பை காணலாம்
https://www.youtube.com/watch?v=f1VEks-QQ4Y